அழகுக்கலை

டிப்ஸ்

By  | 
  • ரு கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதை மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து அரைமணி நேரம் கழித்து சாதாரண நீரில் தலையை கழுவி வர முடி உதிர்வது நிற்கும்.
  • வேப்பங்கொழுந்தைக் கிள்ளி, அதில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள் ஒரு சிறிய துண்டு இவற்றுடன் தண்ணீர் தெளித்து மைபோல் அரைத்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் முடி உதிராது.
  • முடி அதிகம் உதிர்ந்தால் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துத் தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சிகைக்காய் போட்டுக் குளித்தால் தலை முடி உதிர்வது நின்று விடும்.
  • முடக்கத்தான் கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். கரு கருவென முடி வளரவும் உதவும்.

You must be logged in to post a comment Login