கொரோனா

‘டெல்டா’ வைரஸில் இருந்து பாதுகாக்க இரு தவணை தடுப்பூசி -பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்!

By  | 

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு (பிஹெச்இ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

பிரிட்டனில் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் கோவிட் தடுப்பூசிகள், டெல்டா வகை வைரஸுக்கு எதிராக சிறந்த முறையில் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. இரு தவணை தடுப்பூசிகளையும் முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கு டெல்டா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் கணிசமாகக் குறைகிறது.

இதில் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசிகள் 96 சதவீதமும் ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் 92 சதவீதமும் டெல்டா வைரஸுக்கு எதிரான செயல்திறனைக் கொண்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் இதுவரை 14,000 மரணங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன. தடுப்பூசிகள் போடப்படுவதால் 42,000 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login