கொரோனா

தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பும் பின்பும்

By  | 

செலுத்துவதற்கு முன்: இரவில் நன்றாக உறங்கிவிட்டு, நன்றாக தண்ணீர் பருக வேண்டும். டீ, கோப்பி, மதுபானங்களை நான்கு நாட்களுக்கு முன்பு நிறுத்திவிட வேண்டும். துத்தநாகம் நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.

செலுத்திக்கொண்ட பின்பு: உடலில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டால் தடுப்பூசி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று கருதலாம். உடலில் எதிர்ப்பு சக்தி உற்பத்தியாக ஆரம்பித்துவிட்டது என்றும் கருதலாம். சற்று காய்ச்சல், குளிர், சோர்வு, தலைவலி, மயக்கம், மூட்டு அல்லது தசை வலி ஆகியவை ஒன்று அல்லது மூன்று நாட்களுக்கு இருக்கும்.

­முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை சாறு, தர்பூசணி, ஒரெஞ்ச், பப்பாளி ஆகிய பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

  • காய்ச்சல் இருந்தால் உடலை சூடாக வைத்துக்கொள்ள இஞ்சி டீயை பருகலாம்.
  • சுவாசப் பயிற்சியும் நிம்மதியான உறக்கமும் இயற்கை மருந்துகளாக உதவும்.
  • பசிக்கு ஏற்ப உண்ணவேண்டும். வீட்டில் உருவாக்கிய உணவுகளையே சிறிது சிறிதாக இடைவெளி விட்டு உண்ணலாம்.
  • தேங்காய், எள், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை சமமாக சேர்த்து சற்று சூடாக்கி உடல் வலிக்கு பயன்படுத்தலாம்.
  • தலைவலிக்கு சூடான நீரில் மிளகை சேர்த்து குடிக்கலாம்.
  • வெறும் வயிற்றில் கஞ்சியை சாப்பிடலாம். 10 நாட்கள் வரை சிகரெட், மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது.

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login