General

தந்தையர் தினம்…. கமல் குறித்து சுருதிஹாசன் உருக்கம்!

By  | 

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் ஹிந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக சலார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது தந்தை கமல்ஹாசன் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login