Cookery

தாய் ஃப்ரைட் ரைஸ்

By  | 

தேவையானவை

சாதம்- 500 கி

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

பூண்டு பேஸ்ட்-  1/2 மேசைக்கரண்டி

முட்டைகள்- 2

கெரட் – 50 கி நறுக்கியது

கோஸ் – 50 கி நறுக்கியது

ஃப்ரெஞ்ச் பீன்ஸ் – 50 கி நறுக்கியது

உப்பு –  1/2 மேசைக்கரண்டி

வெஜிடபிள் ஸ்டாக் – 30 மிலி

மிளகாய்கள்-  4 சிறிய

மிளகு தூள்- 1 மேசைக்கரண்டி

வெங்காய தாள்கள் – 2 மேசைக்கரண்டி சிறிதாக நறுக்கியது

 செய்முறை

– எண்ணெயை சூடாக்கி, அதில்  பூண்டு பேஸ்டை இட்டு வதக்கவும், பிறகு, முட்டைகள், கெரட் மற்றும் கோஸைச் சேர்க்கவும்.

– பிரெஞ்ச் பீன்ஸைச் சேர்த்து, தொடர்ந்து கலக்கவும், முட்டை வெந்து, காய்கறிகள் மிருதுவாகத் தொடங்கும் வரை தொடர்ந்து கிளறி விடவும்.

– சாதத்தை இதில் கொட்டி, நன்கு கலக்கவும்.

– இப்பு, வெஜிடபிள் ஸ்டாக், மிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.

– வெங்காய தாள்களால் அலங்கரிக்கவும்.

 

You must be logged in to post a comment Login