
Biodata
நடிகை தீப்ஷிகா
பெயர்: தீப்ஷிகா
அடைமொழி: ‘அர்க்மார்க் தமிழ்ப்பொண்ணு’
பணி: நடிகை, மொடல்
சொந்த ஊர்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படிப்பு: பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ்
சின்ன வயது ஆசை: மருத்துவர் ஆவது.
அப்பா: உமாபதி – பிசினஸ்மேன்.
அம்மா: லட்சுமி – இல்லத்தரசி
சினிமாவில் அறிமுகம்: அவ்வப்போது கிடைக்கும் மொடலிங் வாய்ப்பின்போது இடைக்கிடையே நிறைய ஒடிஷன் களிலும் கலந்துகொள்வது வழக்கம். ‘ரேணிகுண்டா’, ‘கருப்பன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்துக்கான நடிகைகள் தேடலில் வைத்த ஒடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்தும் விட்டார். படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும்.
மூவி லிஸ்ட்:
– விஜய் சேதுபதி நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர்.
– ‘மைக்கேல்’ உள்ளிட்ட தெலுங்கில் 3 படங்கள்
– ரவிதேஜா தயாரிப்பில் ஒரு படம்
அல்பம்: ‘நாட்படு தேறல்’ – பரதனின் இயக்கத்தில் வைரமுத்துவின் வரிகளில் உருவான ‘கேசாதிபாதம்’ பாடலில் நடித்திருக்கிறார்.
பெருமை: தமிழ் சினிமாவில் அறிமுகமானதும் அடுத்தடுத்து படங்களை வரிசையில் கைவசம் வைத்திருக்கிறார்.
வைரமுத்துவிடம் பாராட்டு:
‘ ‘மாநாடு’ படம் பார்த்துட்டு வெளியே வரேன்… அப்ப ஒரு தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்துச்சு. கூட்டத்துல எனக்கு ஒண்ணும் கேட்கவுமில்ல. ‘வணக்கம்மா! நான் வைரமுத்து பேசுறேன்’னு சொன்னாரு நான் திரும்பவும் ‘யார் பேசுறீங்க…’னு கேட்டேன். அதுக்கப்புறம்தான் மறுபடியும் ‘வைரமுத்தும்மா…’னு சொன்னவர், ‘கேசாதிபாதம் பாட்டுக்கு நீங்கதான் உயிர் கொடுத்து இருக்கீங்க… நல்லா நடிச்சிருக்கீங்க’னு சொன்னார். இப்ப வரைக்கும் அந்த சம்பவம் எப்படி நடந்ததுன்னு சர்ப்ரைஸாவே யோசிச்சிட்டு இருக்கேன்…”
பிரியம்: சாப்பாடு என்றாலே கொள்ளைப் பிரியம். சாப்பாட்டை கண்டாலே வெர்க்-அவுட் மூட் எல்லாம் பறந்துவிடும்.
ஃபிட்னஸ் ரகசியம்: வெர்க்-அவுட் – ஒரு நாளைக்கு ஒரு முறை மாத்திரமே. கடுமையான பயிற்சிகள் எதுவும் கிடையாது.
You must be logged in to post a comment Login