General

நவக்கிரகங்களை வீட்டில் வழிபடலாமா?

By  | 

கேள்வி – பதில்கள்

  1. பைரவரை வணங்கினால் வெற்றி கைகூடுமா?

நம்பிக்கையுடன் வழிபடுங்கள். விடாமுயற்சியுடன் செயற்படுங்கள். பைரவர் மட்டுமின்றி எந்த தெய்வத்தை வழிபட்டாலும் இது பொருந்தும்.

 

  1. வீட்டில் சுவாமிக்கு பிரசாதமாக என்ன படைக்கலாம்?

சுவாமி படங்கள் மட்டும் இருந்தால் வாழைப்பழம், கற்கண்டு வைத்து பூஜை செய்யலாம். அபிஷேகம் செய்யும் விக்கிரகங்கள் இருந்தால் சர்க்கரைப்பொங்கல், சோறு (சுத்தான்னம்) படைத்து வழிபடலாம்.

 

  1. திருமண யோகம் அமைய யாரை வழிபடலாம்?

சிவன் கோவிலில் உள்ள அம்மனுக்கு 9 வாரங்கள் திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்யுங்கள். திருமணம் நடக்கும் வரை செய்வது மிகவும் நல்லது.

 

  1. அசைவ உணவு சாப்பிட்டு பூஜை செய்வது தவறா?

‘படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பெருமாள்கோயில்” என்பது போல இருக்கலாமா? பூஜை செய்பவர் மனம், உடல் தூய்மையுடன் இருப்பது அவசியம். ஆன்மிக வாழ்வின் அடிப்படை பண்பு ஜீவகாருண்யம் என்பதால் அசைவம் கூடாது. அசைவம் சாப்பிட்டு பூஜை செய்வது பாவச்செயல்.

 

  1. குலதெய்வத்தை தரிசிப்பது கட்டாயமா?

குலதெய்வ அருளால்தான் வழிவழியாக சந்ததி காப்பாற்றப்பட்டு வருகிறது. பெற்றோர் போல விளங்கும் குலதெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

 

  1. குழந்தைக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறதே….

விளையாட்டு ஆர்வத்தில் எப்போதாவது குழந்தை விழுவது, காயம்படுவது இயல்பானது. திருஷ்டியால் அடிக்கடி கீழே விழும் குழந்தைக்கு வாரம் ஒருமுறை திருஷ்டி சுற்றுவது நல்லது.

 

  1. நவக்கிரக படத்தை வீட்டில் வழிபடலாமா?

வழிபடலாம். ஆனால், சனீஸ்வரருக்கு ஏற்றும் எள்தீபம் போன்ற பரிகாரங்களை கோவிலில் தான் செய்யவேண்டும்.

You must be logged in to post a comment Login