நாளொன்றுக்கு லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு, மருத்துவர்கள் திணறல்

By  | 

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்த நிலையில் ஒமிக்ரோன் தொற்று பரவத் தொடங்கியதும் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது.

தற்போது, அமெரிக்காவில் கடந்த 7 நாள்களின் சராசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால், அதிக வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால் மருத்துவர்கள் திணறி வருகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 கோடியாக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,500 க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 8 லட்சமாக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment Login