பொது

பக்கெட்டுக்காக ஒரு போர்!

By  | 

ஒரு பக்கெட்டுக்காக இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூண்டது என்பதை நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மை. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், பண்டைய இத்தாலி சிறு சிறு ராஜ்ஜியங்களாகப் பிரிந்திருந்தது. அவற்றில் பொலோனா, மோடினா என்ற இரண்டு ராஜாங்கங்களுக்கு இடையேதான் இந்த பக்கெட் போர் மூண்டது. பல வருடங்கள் தொடரவும் செய்தது.

1176ஆம் ஆண்டில் மோடினாவைச் சேர்ந்த சில படைவீரர்கள் பொலோனா நாட்டில் ஒரு பொதுக்கிணற்றில் உபயோகப்படுத்தி வந்த ஒரு பக்கெட்டையும் இன்னும் சில பொருட்களையும் திருடி, தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

மோடினா நாடு அந்த பக்கெட்டைத் திருப்பிக் கொடுக்கும்படி பொலோனா நாட்டைக் கேட்டுக் கொண்டது. பொலோனா நாடு மறுத்துவிட்டது. சதத்துக்கு கூட பெறுமானமில்லாத அந்த பக்கெட், இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. அந்த பக்கெட்டைத் திருப்பிப் பெற்றுக்கொள்வதற்காக பொலோனா நாடு, மோடினா மீது போர் தொடுத்தது. இரண்டு நாடுகளும் பல வருடங்கள் தொடர்ந்து போரிட்டன. 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்தனர். கடைசியில் மோடினாவே போரில் வென்று பக்கெட்டை தக்க வைத்துக் கொண்டது. சரியான அக்கப்போர்தான்!

You must be logged in to post a comment Login