General

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் பாட்டிகள்

By  | 

பின்லாந்தில் ஒரு பொது நூலகத்தில் சந்தித்துக்கொண்ட 12 பாட்டிகள், தங்கள் பேரக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக ஒரு சிறிய குழுவை Aktivistimummot, அதாவது ‘Activist grannies’ என்ற பெயரில் உருவாக்கினர். இன்று அந்தக் குழுவில் சுமார் 6000 உறுப்பினர்கள் உள்ளனர். பலதரப்பட்ட அரசியல் தலைவர்கள், ஊடகங்களின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றனர். பருவநிலை மாற்றம் குறித்த பல அறிவியல் சார்ந்த தகவல்களையும், தனிமனித அளவில் எப்படி அதைக் கட்டுப்படுத்தலாம் என்ற தகவல்களையும் தொடர்ந்து பதிவு செய்கின்றனர்.

You must be logged in to post a comment Login