Food

புதினா அற்புதங்கள்

By  | 

புதினா, மருத்துவ மூலிகையாகும். நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்.

*புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போவைத்ரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பொஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறாது.

*அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும்.

*ரத்தத்தை சுத்திகரிக்கும்.

*வாயு தொல்லையை நீக்கி வயிற்று புழுக்களை அழிக்கும்.

*புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

*மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்தது.

*முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

*புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து  சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

You must be logged in to post a comment Login