Stories

பூவரசி

By  | 

-சிறுகதை

வரவேற்பறையில் கிடந்த சோபாவில் ஆதிக்கும் வெண்பாவும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். நேர்த்தியாய் அயர்ன் செய்திருந்த ஆடைகளை கசக்கி விளையாடிக் கொண்டிருந்தவர்களை நந்தகி இடை மறித்தாள். ‘ஆதிக்! ரெடியாகி ஒழுங்காய் இருங்கோ ட்ரெஸ் கசங்கு தெல்லோ…” என்றபடி, வெண்பாவை கோபமாகப் பார்த்துக்ரிகொண்டே, கண வனுக்குக் குரல் கொடுத்தாள். ‘தாயு… ரெடியாகீட்டீங்களா? நான் ரெடி… வாங்கப்பா” என்றுகொண்டு தன்னை ஒருமுறை எல்லாம் சரிதானா என்றபடி ஏறெடுத்தாள்.
‘யெஸ் மெடம்! ஐ ஆம் ரெடி…” என்ற வாறு, அறையிலிருந்து வெளிப்பட்டான் தாயகன்| நந்தகியின் கணவன். அந்த வசீகரிக்கும் புன்னகை இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான பின்னும் கூட, அவனுக்குள் மாறவேயில்லை. அத்தனை அழகு. ‘சூப்பரா இருக்கப்பா வேஷ்டி…” கண்களால் அழவிட்டு, கவிதைகளாய் இரண்டு மொழிகளில் சொல்லிக் கண்ணடித்துக்கொண்டே இதழ்குவித்தாள். ஒருநொடியில் ஏராளம் காதல் இருவருகரி;குள்ளும் மின்சாரமாய் ஓடிமறைந்தது. இன்னும், அந்த முதல் நாள் பாத்துக்கொண்ட பார்வைதான் இருவருக்குள்ளும்!
‘அப்பா… லவ்ஸ் போதுமே… வாங்கோ போவம்…” என்ற ஆதிக்கை, செல்லமாய் தலையைத் தடவிக்கொண்டே வெளியில் சென்று காரை தயார் செய்தான் தாயகன். நந்தகி, வெண்பாவோடு பின்னே அமர்ந்து கொள்ள, ஆதிக் முன்னே தந்தையோடு அமர்ந்துகொண்டான். கார் ஓட்டத்தை அதிகமாக்கியது. சாலையோர மரங்கள் பின்னே ஆட, நீண்ட தார்சாலை தன்னை நீட்டி விரித்துக்கொண்டே போனது. காருக்குள் இளையராஜாவின் 80களில் வந்த பாடல்கள் அடுத்தடுத்து ரீங்காரமிட்டு ஒருவித அமைதியையும் அழகிய சூழலையும் பிரசவித்துக் கொண்டிருந்தது. தாயகன் வாகனத்தைச் செலுத்துவதில் தன்னை தொலைத்திருந்தான். வவுனியாவிலிருந்து புளியங்குளம் சென்று, அங்கிருந்து ஒட்டுசுட்டான் வழிரியாக முல்லைத்தீவு செல்ல வேண்ரிடும். 20 வருடங்களுக்குப் பின் நாட்டுக்கு வந்திருக்கிறான். பாதைகள் பன்மடங்ரிகாக வளர்ந்துவிட்டன. அதாவது, கிரரிவல் வீதிகளாய் கிடந்த சாலைகள், இன்று நேர்த்தியான கார்ப்பெட் வீதிரிரிகளாய், விரைவுப் பயணத்தை மேற்ரிகொள்ள வழிசெய்தன. புதர் மண்டிக்ரிகிடந்த இருமருங்கிலும், பூந்தொட்டிகளும், அலங்காரக் கற்களும் அடுக்கப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருந்தாலும், தன் தாய்நாட்டை அடிக்கடி தேடிப் பார்த்துக்கொண்டிருந்தான் தாயகன். அவன் பிறந்த, நேசித்த மண்ணாயிற்றே! எப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்துபோக முடியும்?
நந்தகி அப்போதே சொல்லிவிட்டாள். ‘தாயூ… உங்களுக்கு ரோட் சரியா நினைவில்லை எண்டால், ட்ரைவர் பிடிப்பம். ஏனப்பா ரிஸ்க் எடுப்பான்?” ‘இல்லம்மா, எனக்கு நினைவருக்கப்பா. நான் ஓடித்தரிஞ்ச மண்ணல்லோ… எப்பிடி மறக்கும்? எங்கட ஊர்ல… எங்கட ரோட்டில ஓடிப் பாக்கோஞம். எனக்கு எவ்வளவு நாள் ஆசை தெரியுமோ செல்லம்? நானே ஓடுறன் டோன்ட் வொர்ரியம்மா” தைரியமாய் சொல்லிக்கொண்டே, தன் மனைவியை சம்மதிக்க வைத்துவிட்டான் தாயகன். அவளுக்கு அநாவசியமாக ரிஸ்க் எடுப்பது விருப்பமில்லைதான்| ஆனாலும் அவனுக்கு அதுவொரு கனவு. அதற்கு மேலும் தடைபோட்டு குறுக்கே நிற்பதில் உடன்பாடில்லை. சம்மதித்துவிட்டாள்.
இப்போது மீண்டும் இளையராஜாவின் ஆட்சி! ‘எங்கெங்கும் நீ சென்ற போதும்… என் நெஞ்சமே உன்னைத் தேடும்…” யேசுதாஸ் பாடிக்கொண்டிருக்க, ஆதிக் அமைதியைக் கலைத்தான். ‘அப்பா! யாரப்பா பூவரசி?” தாயகனை ஏறிட்டுக்கொண்டே கேள்வியை நிறுத்தி னான். காரைச் செலுத்துவதிலும் பாடலின் சுகத்திலும் தன்னைத் தொலைத்திருந்த தாயகன், சுதாகரித் துக்கொண்டான். ‘பூவரசியா? உனக்கு எப்படித் தெரியும் ஆதிக்?” இவனுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று புருவங்களை உயர்த்தி அவன் பதிலுக்காய விழித் தான்.

‘அதுவா அப்பா? நீங் களும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டனான். முதலே கேட்க நினைச்சனான் அப்பா. பிறகு மறந்திட்டன். யாரப்பா அவ?” கேட்டுவிட்டு வெள்ளந்தியாய் சிரித்தான் மகன்.
கண்ணாடியைச் சரிசெய்துவிட்டு, ‘உன் அம்மாட்ட கேள் தம்பி. அவவுக்கு தான் என்னை விட நிறையத் தெரியும். பூவரசி யார்? எப்பிடி எங்களுக்குள்ள வந்தவ எண்டு…” சொல்லிக்கொண்டே, கண்ணாடி வழியாய் நந்தகியைப் பார்த்தான் தாயகன். ஏதெனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தான்| ம்கூம்… இல்லை. அப்படியே தான் இருக்கிறாள். ஆனாலும், இப்பொழுது முகத்தில் யோசனைக் கோடுகள் படர்வதை அவதானிக்க முடிகின்றது. ‘ஐய்யய்றோ… நல்லா இருந்தவளின் மூட்டை, ஆதிக் கேள்வி கேட்டு குழப்பி விட்டானே” என்று இவனுக்குள் நெருடலாகியது.
கண்ணாடி வழியாகவே என்ன என்பது போல தலையசைத்தான். ‘நத்திங் அப்பா” பதிலுக்கு முறுவலித்தவள், ‘அப்பா… நிறைய நாள் எனக்கும் கேட்கஙம் எண்டு தோணும். ஆனாலும், நீங்க தப்பா எடுத்தாலும் எண்டு நான் கேட்கவேயில்ல. பூவரசி ஏன் இன்னும் கல்யாணம் செய்யேல்ல? விரும்பினால் சொல்லுங்க… இல்லையெண்டால் வேணாம்…” நீண்டநாள் சந்தேகத்தை கேட்டுவிட்ட தாய் தாயகனைப் பார்த்தாள் நந்தகி. ஏதும் தப்பாய் தன் கணவன் எண்ணி விடுவானோ என்றும் உள்;ர பயம் அவளுக்கு.
சற்றுநேரம் அமைதி. யாரும் பேசிக் கொள்ளவில்லை. இப்பொழுது எம்.எஸ்.வி இசையில் ‘கண்ணே கலைமானே…” என்று யேசுதாஸ் பாடிக்கொண்டிருக்கிறார்.
அடைத்த தொண்டையை செருமிக் கொண்டே தாயகன் மீண்டும் கண்ணாடி வழி தன் மனைவியை உற்றுப் பார்க்கி றான். அருகில் தன் மகன் ஆதிக்கும், தன் பதிலுக்காய் பரபரப்பாய் காத்திருப்பது புரிகிறதுதானே ஆரம்பித்தான்.
‘ஆதிக்! பூவரசி… உங்க அப்பா… அதா வது நான், சின்ன வயசில லவ் பண்ணின கேர்ள்…” என்றுவிட்டு அவர்களுடைய முகபாவங்களை அவதானித்தான். பிள்ளைகள் இருவரும் இருக்கையின் நுனிக்கு வந்துவிட்டார்கள். அவ்வளவு ஆர்வம். புரிந்ததினால் வந்த ஆர்வமா? அல்லது புரியாமல், கதை கேட்கும் ஆர்வமா என்று தெரியவில்லை. நந்தகி மட்டும் எந்த சலனமுமில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பதாய் தோன்றிற்று.
‘லவ்வா அப்பா? நீங்களோ?” மீண்டும் ஆதிக் கேட்க, இடைமறித்தான் தாயகன். ‘ஓம் தம்பி. அப்போ நான் ஏ.எல். படிச்சுக் கொண்டிருந்தன். எனக்கு படிக்கிறது சரியான விருப்பம். ஆனால், வீட்டில சரியான கஷ்டம். அடுத்த நேர சாப்பாட்டுக்கே அப்பாவும், அம்மாவும் கஷ்டப்படுவினம். நிறைய போராட்டம். நான் ஸ்கூல் போவன். அங்கயிருந்து வந்து பின்னேரம், தென்னந்தோட்டத்தில் தேங்காய் பொறுக்கிக் கொடுக்கிற வேலைக்குப் போவன். அதுல கொஞ்ச காசு கிடைக்கும். அதை வைச்சுத்தான் என்ட ஸ்கூல் செலவுகளை சமாளிப்பன். அம்மாட்ட சாமான்கள் வாங்கவும் கொஞ்சம் கொடுப்பன். அந்த டைம்ல அறிமுகம் ஆனவதான் பூவரசி. யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்து, வன்னிக்கு வந்திருந்தவ அவையள். பூவரசி கறுத்தப்பிள்ளை. கொஞ்சம் குண்டுப் பிள்ளை. ஆனாலும், நல்ல கெட்டிக்காரி. நல்லா படிப்பா. அழகா பாடுவா. அவவுக்கு என்னில விருப்பம் எண்டு, ஒருக்கால் விளையாட்டுப் போட்டி நடக்கிற டைம்ல, என்னட்ட சொன்னா. எனக்கும் அவவ பிடிக்கும். ஆனால், வெக்கத்தில அதுவரைக்கும் லவ் எண்டெல்லாம் சொன்னதில்ல… அந்த நேரம் அவ லவ்வ சொல்லேக்க, நான் மறுக்கேல்ல. சம்மதிச்சிட்டன்…” சொல்லிவிட்டு நந்தகியை நோக்கினான். அவள் பதிலுக்கு மெல்லியதாய் புன்னகைத்தாள். அதில் கொஞ்சம் பச்சாத்தாபமும். ஏக்கமும் ஒட்டியிருந்தது. மேலே சொல்லுங்கள் என்பது போல, அகல கண்களை விரித்து விழித்தாள்.
‘ம்… பூவரசிக்கும் எனக்கும் லவ் அழகா போச்சு. என்னை நிறைய காதலிச்சவ பூவரசி. சரியான பாசம். எனக்கு நிறைய கிப்ட், ட்ரெஸ் எல்லாம் வாங்கிக் கொடுக்கிறதுதான் அவவுக்கு சந்தோஷம். என்னைப் பார்க்கிறதுக்காக… டெய்லி எங்க அந்தோணியார் கோயிலடியில நிப்பா. நான் பொழுதுபடத்தான் தேங்ரிகாய் பொறுக்குற வேலை முடிஞ்சு போவன். அப்ப… என்னை கவலையோட பார்ப்பா… நான் மறையும் வரைக்கும் பார்த்ரிதுக் கொண்டே இருப்பா. கண்ரிணெல்ரிலாம் கண்ணீரோட…” சொல்லிக்ரிகொண்டிருந்தவனுக்கு, மேலே வார்த்தை வரவில்லை. தொண்டை அடைத்தது.
ஆதிக்கும் வெண்பாவும் அப்பாவையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.
இப்பொழுது நந்தகி தொடர்ந்தாள். ‘இப்பிடி அப்பாவும் அந்த பூவரசி ஆன்டியும் லவ் பண்ணில டைம்ல, வீட்டில கஷ்டம் கூட கூட அப்பாவை ஊர்ல தெரிஞ்ச ஆக்கள் மூலமா, வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சார் உங்கட அப்பப்பா. காணிய வித்து, அப்பம்மாட கிடந்த நகைகள் எல்லாத்தையும் வித்து, கொஞ்சம் காசு சேர்த்து அவையள்… அப்பாவை அனுப்பி வைக்க, அப்பாவுக்ரிகும் வேற வழி தெரியேல்ல. காதலா பூவரசியா? குடும்பமா எண்டு யோசிக்க, குடும்பம்தான் எண்டு முடிவெடுத்தார் அப்பா. பூவரசி அன்ரியும் பிரிய மனசு இல்லாமல் ஓகே சொல்லிட்டா. அப்பா கட்டாருக்கு போய்ட்டார். வேலை செய்துரிகொண்டிருந்தார். அப்ப, இப்போ போல ஃபோன் எல்லாம் இல்ல. கடிதம்தான். அதுவும் நிறைய நாளுக்கு ஒருக்கால்தான் போடலாம். அப்பா வெளிநாடு வந்து கொஞ்சக்காலம் பூவரசி அன்ரியும் லெட்டர் போடுவாவாம். அதுக்குப் பிறகு கொஞ்சக்காலம் ஆள் எங்க எண்டு தெரிரியேல்ல. அப்பாவும் தெரிஞ்ச ஆக்களிட்ட எல்லாம் விசாரிச்சார். சரியா தகவல் தெரியேல்ல. அப்பம்மா… அப்பப்பாக்கும் பூவரசிய தெரியாது. அப்பிடியே ஆள் இல்லை எண்டு அப்பா இருந்திட்டார். கொஞ்சக் காலத்தில, அப்பா உழைச்சு காசு சேர்த்துக் கொண்டு, ஏஜென்சியால இலண்டன் வந்திட்டார். அங்க வந்து… ஒரு ஷொப்ல வொர்க் பண்ணினார். அங்கதான் அப்பாவை நான் பார்த்தன். எனக்கு அப்பாவைப் பிடிச்சிது. எங்கட அம்மாட்ட சொன்னன். அவவுக்கும் அப்பாவை பிடிக்க எங்களுக்கு கல்யாணம் கட்டி வைச்சாங்க. அப்பா ஆரம்பத்திலையே பூவரசி அன்ரியப் பற்றி எனக்கு சொன்னார். அந்தக் கதையைக் கேட்க, எனக்கு கவலையா இருந்தது. அதுக்குப் பிறகு, நான்… அப்பாவுக்குத் தெரியாமல் பூவரசி அன்ரியப் பற்றி தேடத் தொடங்கினன். ரெண்டு, மூண்டு வருஷம்! விடாமல், நாட்டில இருந்த தெரிஞ்சங்களிட்ட கேட்டு, விசாரிச்சு, கடைசியில அவ உயிரோட இருக்கிறா எண்டு கண்டுபிடிச்சன். அதுவரைக்கும் இது எல்லாம் அப்பாக்கு தெரியாது. அவவோட நான் பேசினன். அவ ஒரு ஹொம்லதான் அப்ப இருந்தவ. அது ஏலாத ஆக்கள் இருக்கிற ஹோம். அவவிட்ட நான் யாரென்று சொன்னன். நிறைய அழுதா. நிறைய தாங்ஸ் சொன்னா. டெய்லி அவவோட பேசினன். ஏதாவது ஹெல்ப் வேணுமா எண்டு கேப்பன். கோபமா வேண்டாம் எண்டு சொல்லிடுவா. இப்பிடி இருக்கேக்க, உங்கட அப்பாட பேர்த் டே. அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறதுக்காக கோல் பண்ணி, ரெண்டு பேரையும் கதைக்க வைச்சன். அப்பா கதைக்க, பூவரசி அன்ரி அழுதுட்டா. அப்பாவும்தான். தேம்பி தேம்பி அழுதார். நானும் சேர்ந்து அழுதன். பூவரசி அன்ரி அப்பாவைப் பற்றி நிறைய சொல்லிருக்கா. அப்பா சரியான நல்லவராம் எண்டும், அப்பா… தன்ட ஃபமிலிக்காகத்தான் காதலை விட்டுட்டு வந்தவர் எண்டும் சொன்னா. எனக்கு அப்பாவில மரியாதையும், பூவரசி அன்ரியில அளவுகடந்த பாசமும் வந்தது. அதுக்கு பிறகு அவயள் இருந்த ஹோம்ல உள்ளவங்களுக்கு உதவி செய்வம். உங்கட ரெண்டு பேர்ட பேர்த்டேக்கும் அங்க உள்ள எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவம். ஆனால், பூவரசி அன்ரி பேர்சனலா எந்த உதவியும் கேட்டதில்ல| தர்றதா இருந்தாலும் வாங்க மாட்டா. இப்ப நாங்கள் அங்கதான் போறம். இது அப்பாட ஆசை. பூவசரி அன்ரிக்கு நாங்கள் வாறது தெரியாது. அந்த ஹேம்ல உள்ளவங்களுக்கு ரெண்டு பில்டிங், கட்டிக்கொடுக்க போறம்… இது அப்பாட ஆசை ஆதிக்…” என்றபடி, வழிந்த கண்ணீரை ஓரமாய் துடைத்து விட்டாள் நந்தகி. தாயகன் விழிகள் சிவந்து விட்டன.
‘பூவரசி அன்ரி நல்ல பிள்ளை தம்பி. அவவ, அவையள்ட அப்பா, அம்மா கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யச் சொல்லியும் அவ செய்யேல்ல. நான் வருவன் எண்டு பிடிவாதமா இருந்திருக்கா. ஆனால், நான் வரவேயில்லையே. அதுக்குப் பிறகு யுத்தத்தில பூவரசி அன்ரிட அப்பா, அம்மா எல்லாம் இறந்திட்டினம். இப்போ அவவுக்கு யாருமில்ல. ஒரு ஹோம்ல இருக்கிறா. 20 வருஷத்துக்குப் பிறகு அவவ பார்க்கப் போறம்… பாவம் அவ… என்னில உண்மையா லவ் வைச்சிருந்தவ…” என்று விட்டு காரை வலது புறமாக திருப்பி வேகத்தைக் குறைத்தான். நந்தகி அவன் தோளில் கைவைத்து அமர்த்தினாள். ‘சொரி அப்பா…” ஆதிக். தாயகனின் கையைப் பற்றிக்கொள்ள, வெண்பாவின் விழிகள் பனித்துவிட்டன. தூரத்தே கதவு திறக்கிறது. யாரோ ஒருவர் கையசைத்து சைகை செய்கிறார். உள்ளே வரும்படி பணிப்பது புரிகிறது. குரலை செருமிக் கொண்டு தாயகன், காரை உள்ளே செலுத்தினான்.
திரும்பவும் நந்தகி ‘தம்பி! அப்பா நேர்மையானவர். உண்மையா இருக்கிறவர். அவர் காதல்ல துரோகம் செய்யேல்ல. எனக்கும் துரோகம் செய்யேல்ல. ஆனாலும், அவர் தவறவிட்ட காதலை நிறைய மிஸ் பண்ணினார். அதை எனக்கே சொல்லுவார். அதுதான் அப்பாவையும், பூவரசி அன்ரியையும் பார்க்க வைக்க நான் முடிவு செய்து சம்மதிச்சன். இது எப்பவும் நமக்குள்ள இருக்கோணும் என… அன்ரிய பார்க்கும் போது கேட்கக் கூடாது… ம்…” என்றபடி கதவைத் திறந்து இறங்கினாள். தாயகன் மறுபக்கத்திலிருந்து வெளியே வந்தான்.
‘யாரைப் பார்க்கோணும்?” அங்கிருந்த வர் வினவ, ‘பூவரசி” என்றாள் நந்தகி.
‘யாழில் பூவரசி அக்காவ கூட்டி வாங்கோ” என்றுவிட்டு அவர் நகர, இவர்கள் நால்வரும் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்தார்கள். தாயகனுக்கு படபடப்பு அதிகமாகிக் கொண்டிருக்க, அங்கே சக்கரநாற்காலியில் இருக்கும் ஒரு பெண்ணை| இன்னொரு பெண்மணி அழைத்து வந்து கொண்டிருந்தாள். இரண்டு கால்களும் இல்லை என்பது தெரிந்தது. முகம் மட்டும் அதே வசீகரப் புன்னகையோடு தாயகனை கேள்விக ளோடு ஏறிட, ‘பூவரசி!!!” என்று முணு முணுத்தபடி எழும்பினான் தாயகன். நந்தகி வந்துகொண்டிருந்தவளை நோக்கி ஓடுகிறாள்| துயரம் தொண்டையை வரண்டு போகச் செய்ய, தாயகன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

– இராமசாமி ரமேஷ்,
முல்லைத்தீவு.

 

You must be logged in to post a comment Login