General

மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இலங்கை 129ஆவது இடத்தைப் பிடித்துள்ளது

By  | 

‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2021’ இனை ஐ.நா. அமைப்பு அண்மையில் வெளியிட்டது. 149 நாடுகளின் மக்கள் கடந்த ஆண்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது குறித்து ஆராய்ந்து, அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இலங்கை 129-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சா்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20-ஆம் திகதியையொட்டி, ஐ.நா. அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மக்களின் வாழ்வில் கொரோனா நோய்த்தொற்று பரவல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அத்தொற்றை உலக நாடுகள் எவ்வாறு எதிர்கொண்டன என்பது பற்றியும் ஆராயப்பட்டது.

கொரோனாவை எதிர்கொள்வதில் ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது.

மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 19-ஆவது இடத்தில் உள்ளது.

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

தனிநபருக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சுகாதார நிலை, மக்களுக்கு நிலவும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

 

மகிழ்ச்சி நிறைந்த மக்கள் வாழும் முதல் 20 நாடுகள்

  1. பின்லாந்து
  2. ஐஸ்லாந்து
  3. டென்மார்க்
  4. சுவிட்சர்லாந்து
  5. நெதர்லாந்து
  6. சுவீடன்
  7. ஜெர்மனி
  8. நோர்வே
  9. நியூசிலாந்து
  10. ஆஸ்திரியா
  11. இஸ்ரேல்
  12. அவுஸ்திரேலியா
  13. அயர்லாந்து
  14. அமெரிக்கா
  15. கனடா
  16. செ குடியரசு
  17. பெல்ஜியம்
  18. ஐக்கிய இராச்சியம்
  19. தாய்வான்
  20. பிரான்ஸ்

 

பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள்

149. ஆப்கானிஸ்தான்

148. ஜிம்பாப்வே

147. ருவாண்டா

146. போட்ஸ்வானா

145. லெசோதோ

 

You must be logged in to post a comment Login