மனித இனத்திற்கு எச்சரிக்கை – ஐநா காலநிலை மாற்றத்திற்கான அறிக்கை கூறுவது என்ன?

By  | 

பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறான செய்திகள் நம்மிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதற்கு உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல்மட்டம் அதிகரித்ததுமே காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இவை எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த அறிக்கையை ஐநா காலநிலை அறிவியல் குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன,

 1. உலகம் வேகமாக வெப்பமடைந்துவருகிறது.
  அந்தவகையில், 2018ஆம் ஆண்டு, கணிக்கப்பட்டதுபோல் அல்லாமல் 10ஆண்டுகளுக்கு முன்பாகவே 2030ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கவுள்ளது.
 2. கடல் மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
  1901 முதல் 1971 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுக்கு, சராசரியாக 1.3 மில்லிமிட்டர் அளவு உயர்ந்த கடல்மட்டம், 2006 முதல் 2018 வரை, 3.7 மில்லிமிட்டர் அதிகரித்தது. அதாவது இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது.
 3. 1950களிலிருந்து வெப்ப அலைகள் உள்பட  வெப்பத்தின் தீவிரம் அதிகரிப்பது அடிக்கடி நிகழ்ந்துள்ளது.
  குறிப்பாக, நிலபரப்புகளில் அதன் நிகழ்வு அதிகமாக இருந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, குளிரின் அலைகள் உள்பட குளிரின் தீவிரம் நிகழ்வது வெகுவாக குறைந்துள்ளது.
 4. மனிதர்களின் நடவடிக்கைகளால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
 5. உலக வெப்பமயமாதலின் மையமாக நகரங்கள் உள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக இருப்பதாலும் நீர்நிலைகள், தாவரங்கள் ஆகியவை குறைவாக உள்ளதாலும் நகரங்களில் வெப்பமயமாதல் அதிகமாக உள்ளது.
 6. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கனமழை, வறட்சி ஆகியவை அடிக்கடி நிகழ்ந்துள்ளது. அதன் தீவிரத்தன்மையும் அதிகரித்துள்ளது.
 7. தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் தாக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  இவை பல்வேறு இடங்களில் பல மாதிரியாக சேர்ந்து நிகழவும் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, வெப்ப அலைகள், வறட்சி ஆகிய இரண்டு நிகழ்வுகள் ஒன்றாகவும் தீவிரமாகவும் நிகழ வாய்ப்புள்ளது.
 8. குறிப்பிட்ட தீவிரமான நிகழ்வுகளின் காரணத்தை கண்டிபிடிப்பது கடினமாக உள்ளது. இருப்பினும், மனிதர்களின் செயல்களால் எந்தளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் கூறலாம்.
 9. காலநிலை மாற்றமும் தரமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இவ்விரண்டு பிரச்னைகளையும் ஒன்றாக எதிர்கொண்டால் பொருளாதார ரீதியாக நல்ல பலன் கிடைக்கும்.
 10. புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவதை குறைத்தல் பச்சை வீட்டு வாயுக்கள் வெளிப்பாட்டை குறைத்தல் போன்றவற்றில் உடனடியான தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் இந்த நூற்றாண்டிலேயே உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login