Cinema

மாஸ்க்குகளை விட்டுக் கொடுங்கள்

By  | 

– விஜய் தேவரகொண்டா வேண்டுகோள்

கொரோனா தாக்கம் காரணமாக திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டனர். எனினும் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது தினசரி நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள், மக்களுக்கு வழங்கிவரும் நிவாரண உதவிகள், அரசாங்க உத்தரவுகளை கடைபிடிக்க வலியுறுத்தல்கள், மக்களின் உயிர்காக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தல் என ஏதோ ஒரு விதத்தில் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது சமூக ஊடகத்தில் ஒரு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில் “பொதுமக்கள் தங்கள் தேவைக்காக, வெளியே நடமாடுவதற்காக அதிக அளவிலான மாஸ்க்குகளை வாங்குவதால் நோயாளிகளுக்கும் அவர்களை பாதுகாக்க ஆபத்தான சூழலில் போராடும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோர்களுக்கும் மாஸ்க் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு தட்டுப்பாடின்றி இவற்றை கிடைக்க வழிசெய்யும் விதமாக பொதுமக்கள் மாஸ்க்குகள் வாங்குவதை தவிர்த்து, கைக்குட்டை, துப்பட்டா போன்றவற்றை பயன்படுத்துங்கள்”என உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

 

You must be logged in to post a comment Login