Cinema

மாஸ்க் செய்ய கற்றுக் கொடுக்கும் வித்யா பாலன்

By  | 

தேசிய விருது பெற்ற பொலிவுட் நடிகை வித்யா பாலன். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பொசிட்டிவான விடயங்களை பகிர்ந்து வருகிறவர். தற்போது வீட்டில் இருக்கும் பயன்படுத்தாத துணிகளை வைத்து மாஸ்க் தயாரிப்பது எப்படி என்பது குறித்து அதன் செய்முறை விளக்கத்தோடு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:

கொரோனாவைத் தடுப்பதில் மாஸ்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், பிரச்சினை என்னவென்றால், நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மாஸ்குகள் பற்றாக்குறை உள்ளது. ஆனால் இதற்கு எளிதான தீர்வு இருக்கிறது.
அதன்படி வீட்டிலேயே மாஸ்குகளை உருவாக்க முடியும். எந்த ஒரு துணியையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது ஒரு துப்பட்டா, தாவணி, பழைய சேலை எதையும் கொண்டிருக்கலாம். உங்களுக்கு இரண்டு பட்டைகள் தேவைப்படும். ரப்பர் பேண்டுகள், அல்லது கை பையில் உள்ள வளையங்கள் எதையும் பயன்படுத்தலாம். அவற்றை பயன்படுத்தி  மாஸ்குகள் தயாரிக்கலாம். என்கிறார் வித்யா பாலன்.

You must be logged in to post a comment Login