Articles

‘மாஸ்க்19’

By  | 

ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மருந்துக் கடைக்குச் செல்லும் பெண்கள் ‘மாஸ்க்19’ இருக்கிறதா என்று கேட்பார்களாம். இதற்கு என்ன பொருள் தெரியுமா? குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க எங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவுங்கள் என்று கேட்பதற்கான சங்கேத வார்த்தைகள் அவை.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் பேரிடர், குடும்ப வன்முறையைத் தீவிரமாக்கியிருக் கிறது என்பதற்கு வலுச்சேர்க்கும் பல சம்பவங்கள் சீனா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன. குடும்ப வன்முறையை ‘உலகளாவிய நிழல் பேரிடர்’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் பேரிடரை எதிர்கொள்ள வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வீடு பாதுகாப்பானது அல்ல என்பதே உண்மை. குடும்ப வன்முறையால் பலதரப்பட்ட கொடுமைகளுக்குப் பெண்கள் உள்ளாகின்றனர். ஆபாசமான வார்த்தைகளால் பெண்களைத் திட்டுவது, வீட்டுச் செலவுக்குப் பணத்தைக் கொடுக்காமல் அலைக்கழிப்பது, உளவியல்ரீதியான துன்புறுத்தல்கள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் எனப் பலதரப்பட்ட கொடுமைகள் புகார்களாகப் பதிவாகிவருகின்றன.

You must be logged in to post a comment Login