Astrology

மித்திரனின் வார­பலன் 13.08.2018 முதல் 19.08.2018 வரை

By  | 

மேஷம்:மனதில் உரு­வான குழப்பம் நண்­பரின் ஆலோ­ச­னையால் விலகும். சமூக சேவைப்­ப­ணிக்­காக பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்­புக்­களை பயன்­ப­டுத்தி பண­வ­ரவை அதி­க­ரிப்­பீர்கள். பிள்­ளைகள் படிப்­புடன் ஆன்­மிக நம்­பிக்­கை­யிலும் மேம்­ப­டுவர். விவ­கா­ரங்­களில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவி குடும்ப ஒற்­றுமை நிலைத்­தி­ருக்க பணி செய்வார். பணி­யா­ளர்கள் அக்­க­றை­யுடன் பணி­பு­ரிந்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உப­யோகப் பொருட்கள் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

ரிஷபம்:அக்கம் பக்­கத்­தவர் அன்பு பாராட்­டுவர். மனமும் செயலும் உற்­சாகம் பெறும். பிள்­ளைகள் பெற்­றோரின் வழி­காட்­டு­தல்­களின் பயன் உணர்ந்து ஏற்­றுக்­கொள்வர். ஆரோக்­கியம் சீராக இருக்கும். மனைவி உங்­களின் நல்ல குணத்தை பாராட்­டுவார். உற­வி­னர்­களின் வரு­கையால் வீட்டில் சந்­தோஷம் நிறைந்­தி­ருக்கும். பணி­யா­ளர்கள் நிர்­வா­கத்தின் சட்­ட­திட்டம் பின்­பற்ற வேண்டும். பெண்­க­ளுக்கு தாய் வீட்­டாரின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நாள்: புதன்

மிதுனம்:மனதில் இருந்த குழப்பம் விலகும். அன்­றாடப் பணிகள் எளிதில் நிறை­வேறும். உங்­களை புகழ்ந்து பேசு­ப­வர்­க­ளிடம் கவ­ன­மாக இருங்கள். பிள்­ளை­களின் தகுதி, திற­மைக்­கேற்ப செயல்­பட உத­வுங்கள். பூர்­வீகச் சொத்தால் பண­வ­ரவு கூடும். உடல் ஆரோக்­கி­யத்­திற்கு சிகிச்சை தேவைப்­ப­டலாம். மனை­வியின் அன்பு குடும்ப ஒற்­று­மையை பாது­காக்கும். பணி­யா­ளர்கள் குடும்ப தேவை­க­ளுக்­காக அதிக வேலை வாயப்பை ஏற்­றுக்­கொள்வர். பெண்கள் சிக்­க­ன­மாக பணம் செலவு செய்வர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கடகம்:பணி­களின் முக்­கி­யத்­துவம் உணர்ந்து செயல்­ப­டு ­வீர்கள். தாய்­வழி உற­வி­னர்கள் உத­வுவர். பிள்­ளை­களின் மனதில் ஞானம் நிறைந்த சிந்­தனை தோன்றும். சிர­மங்கள் அணு­காத சுமுக வாழ்வு அமைந்­திடும். மனைவிக்கு விரும்­பிய பொருள் வாங்கித் தரு­வீர்கள். உற­வினர் வீட்டு சுப­நி­கழ்ச்­சியில் கலந்துகொள்­வீர்கள். பணி­யா­ளர்கள் நிர்­வா­கத்தின் சட்­ட­திட்டம் தவ­றாமல் பின்­பற்ற வேண்டும். பெண்கள் பிள்­ளை­களின் நலன் சிறக்க பணி­பு­ரிவர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

சிம்மம்:சமூக நிகழ்­வு­களை உணர்ந்து செயல்­பட வேண்டும். தாம­த­மான பணிகள் புதிய முயற்­சியால் நிறை­வேறும். தாய்­வழி சார்ந்த உற­வினர் உத­வுவர். பிள்­ளை­களின் கவ­னக்­கு­றைவை இனிய அணு­கு­மு­றையால் சரி செய்­யவும். சத்­தான உண­வு­களை உண்டு மகிழ்­வீர்கள். மனை­வியின் பொறுப்­பான செயல் குடும்­பத்­திற்கு பெருமை சேர்க்கும். பணி­யா­ளர்கள் பணி­யி­டச்­சூழல் உணர்ந்து செயல்­ப­டுவர். பெண்கள் குடும்ப சிர­மங்­க­ளுக்கு எளிதில் தீர்வு காண்பர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி:சிறு பணியும் நேர்த்­தி­யாக அமையும். உற­வினர் வருகை மகிழ்ச்­சியை தரும். பிள்­ளைகள் உங்கள் பேச்சை வேத­மென மதித்து பின்­பற்­றுவர். குடும்­பத்­தேவை தாராள பணச்­செ­லவில் பூர்த்­தி­யாகும். எதிர்ப்­பா­ளரால் இருந்த தொல்லை விலகும். மனைவி ஒற்­று­மை­யுடன் குடும்­ப­நலன் பேணுவார். பணி­யா­ளர்கள் ஒரு­மு­கத்­தன்­மை­யுடன் பணி­பு­ரிவர். பெண்கள் கண­வரின் அன்பை பெற்று சந்­தோஷ வாழ்வு நடத்­துவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

துலாம்:எண்­ணமும் செயலும் புத்­து­ணர்வு பெறும். புதிய வாகனம் வாங்கும் வசதி வாய்ப்பு கிடைக்கும். பிள்­ளை­களின் செயல்கள் சிறப்­பாக அடைந்­திட உத­வு­வீர்கள். உடல் ஆரோக்­கி­யத்தில் கூடுதல் கவனம் வேண்டும். மனைவி உங்­களின் நல்­ல­குணம் மற்றும் செயலை பாராட்­டுவார். விருந்து, விழாவில் கலந்துகொள்­வீர்கள். அலைச்சல் பய­ணங்­களைத் தவிர்க்­கவும். பணி­யா­ளர்கள் புதிய தொழில்­நுட்பம் கற்றுகொள்வர். பெண்கள் குடும்ப தேவைக்கு தாராள அளவில் பணம் செலவு செய்வர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

விருச்­சிகம்:எவ­ரி­டமும் நிதா­னித்து பேசு­வீர்கள். செல்வ வளம் அதி­க­ரிக்கும். வீடு, வாக­னத்தில் தகுந்த பாது­காப்பு வேண்டும். பிள்­ளைகள் நல்ல குணங்­க­ளுடன் செயல்­பு­ரிந்து பெற்­றோரின் அன்பை பெறுவர். குடும்­பத்தில் ஒற்­று­மையும், மகிழ்ச்­சியும் நிறைந்­தி­ருக்கும். பணக்­க­டனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். மனைவி வழி­சார்ந்த உற­வி­னர்­களின் உதவி கிடைக்கும். பணி­யா­ளர்­க­ளுக்கு நற்­பெ­யரும் சலு­கையும் கிடைக்கும். பெண்கள் விரும்­பிய பொருட்கள் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

தனுசு:எதிர்­பார்ப்பு திட்­ட­மிட்­ட­படி நிறை­வேறும். சமூ­கத்தில் உங்­களின் நன்­ம­திப்பு பெருகும். தம்பி, தங்­கையின் பாசம் நெகிழ்ச்சி தரும். பிள்­ளைகள் படிப்பு செயல்­தி­றனில் மேம்­ப­டுவர். பூர்வ சொத்து பரா­ம­ரிப்பில் தகுந்த கவனம் வேண்டும். வழக்கு விவ­காரம் சுமுக தீர்வு பெறும். மனைவி குடும்­ப­ந­லனில் சிறப்­பாக கவனம் கொள்வார். பணி­யா­ளர்கள் பணி­யி­டச்­சூழல் உணர்ந்து பணி­பு­ரிவர். பெண்கள் ஆடை, ஆப­ரணம் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

மகரம்:மனதில் நம்­பிக்­கையை பாது­காக்க வேண்டும். நண்­பரின் உதவி ஓர­ளவு கிடைக்கும். வாக­னத்தை பரா­ம­ரிப்பு செய்­வதால் பயணம் எளி­தாகும். பிள்­ளைகள் புதிய விஷ­யங்­களை அறி­வதில் ஆர்வம் கொள்வர். உடல்­ந­லத்­திற்கு ஒவ்­வாத உண­வு­களை உண்ண வேண்டாம். மனை­வியின் கருத்­துக்கு முக்­கி­யத்­துவம் தரு­வீர்கள். குடும்ப ஒற்­றுமை நிலைத்­தி­ருக்கும். பணி­யா­ளர்­க­ளுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய்­வீட்டு உத­வியை கேட்டுப் பெறுவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

கும்பம்:எதிர்­கால வாழ்வு சிறப்­பாக அமைந்­திட புதிய வாய்ப்­புகள் வந்து சேரும். விரும்­பி­ய­படி வாகனம் வாங்க யோகம் உண்டு. பிள்­ளைகள் நல்ல வித­மாக நடந்து கொள்வர். பூர்­வீகச் சொத்தில் வளர்ச்­சியும், பண­வ­ரவும் அதி­க­ரிக்கும். உடல் ஆரோக்­கியம் பலம்பெறும். சத்­தான உணவு விரும்பி சாப்­பி­டு­வீர்கள். மனை­வியின் செயல்­களில் வரு­கிற குறையை அக்­க­றை­யுடன் சரி செய்­வீர்கள். பணி­யா­ளர்கள் பணி இலக்கை கால அவ­கா­சத்தில் நிறை­வேற்­றுவர். வெளியூர் பயணம் நல்­ல­பலன் தரும். பெண்கள் பிள்­ளைகள் நலனில் அக்­கறை கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

மீனம்:சமூக நிகழ்­வு­களால் இனிய அனு­பவம் கிடைக்கும். கவ­ன­முடன் எதிர்­காலத் திட்­டங்­களை நிறை­வேற்­று­வீர்கள். உடன்பிறந்தவர் சொந்த பணிகளில் ஈடுபடுவர். வாகனப் பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும். பிள்ளைகள் கடமையுணர்வுடன் நடந்து பெற்றோருக்கு பெருமையை தேடித் தருவர். எதிர்ப்பாளர்களிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். மனைவியின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

You must be logged in to post a comment Login