Astrology

மித்திரனின் வார­பலன் 15.07.2018 முதல் 21.07.2018 வரை

By  | 

மேஷம்:நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாமதமான செயல்களில் முன்னேற்றம் ஏற்­படும். எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். பிள்ளை­கள் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பர். குடும்பத்­தில் வெகுநாள் இருந்த பிரச்சினையின் தீவிரம் குறையும். அதிக நிபந்தனையுடன் பணக்கடன் பெற வேண்­டாம். மனைவியின் அன்பு நெகிழ்ச்­சியை தரும். பெண்­கள் பிறருக்காக பணப்­பொறுப்பு ஏற்க கூடாது.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

ரிஷபம்:எவரிடமும் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டாம். தம்பி, தங்கை ஓரளவு உதவுவர். பிள்ளைகளின் அறிவாற்றல், செயல்திறன் வளர உதவுவீர்கள். பகைவரால் உருவான கெடு செயல் பலமிழக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் மதிப்பு மரியாதை தருவர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். பெண்கள் குடும்ப எதிர்கால நலன் பற்றி கணவரிடம் பேசுவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

மிதுனம்:தொடர்பில்லாத பணிகளை தவிர்ப்பதால் மன அமைதியை பாதுகாக்கலாம். உடன்பிறந்தவர் கருத்து பேதம் கொள்வர். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேற உதவுவீர்கள். ஒவ்வாத உணவு தவிர்க்கவும். மனைவி உங்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொள்வார். பெண்கள் குடும்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கடகம்:மனதில் பலநாள் இருந்த கவலை நீங்கும். பணிகள் உரிய காலத்தில் நிறைவேறும். தம்பி, தங்கை வாழ்வு வளம்பெற உதவுவீர்கள். பிள்ளை­கள் விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். உடல் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை தேவைப்­படும். மனைவி உங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார். பெண்கள் உறவினர்களின் நன் மதிப்பைப் பெறுவர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

சிம்மம்:செயல்கள் எளிதாக நிறைவேறும். வாழ்வில் அதிர்ஷ்டகரமான நன்மை கிடைக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். பிள்ளைகள் உங்கள் சொல்லை வேதமென ஏற்றுக்கொள்வர். எதிர்ப்பாளரால் உருவான கெடுசெயல் பல­மிழக்­கும். மனைவி அதிக பாசத்துடன் உதவு­வார். வீட்­டுக்கு தேவையான பொருட்கள் வாங்கு­வீர்­கள். பெண்­கள் பிள்ளைகளின் நலனில் அக்கறைகொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

கன்னி:நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாகனத்தில் பராமரிப்பு பணச்செலவு கூடும். பிள்ளைகள் பெற்றோரின் பரிபூரண அன்பை பெறுவர். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்­கும். மனைவியின் அன்பான வார்த்தை மனதில் நம்பிக்கையை தரும். பெண்கள் பிரார்த்­தனை நிறைவேறி இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

துலாம்:புதியவர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். முக்கியமான பணி எளிதாக நிறைவேறும். பிள்ளைகள் படிப்பு வேலையில் மனப்பூர்வமாக ஈடுபடுவர். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மனைவி குடும்ப விவகாரங்களில் பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வார். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

விருச்சிகம்:கடந்தகால நற்செயலுக்கு புகழும் நன்மையும் தேடி வரும். தாயின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். சொத்து தொடர்பான ஆவணங்களை கவனமுடன் பாதுகாக்கவும். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்பில் சந்தோஷ வாழ்வு நடத்துவர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

தனுசு:எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். பணிகள் எளிதாக நிறைவேறும். பிள்ளைகள் பெற்றோரிடம் அதிக அன்புகொள்வர். வழக்கு விவகாரங்களில் சுமுக தீர்வு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

மகரம்:பொது இடங்களில் சூழல் உணர்ந்து பேச வேண்டும். உடன்பிறந்தவர் அதிக அன்பு பாராட்டுவர். பிள்ளைகளை நல்வழி நடத்துவதில் இதமான அணுகுமுறையை பின்பற்றுங்கள். பணக்கடன் பெறுவதில் நிதானம் பின்பற்ற வேண்டும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கவேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கும்பம்:குடும்ப உறுப்பினர் தரும் ஆதரவு மனதில் ஊக்கம் தரும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பர். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆர்வமிகு செயல்களை குறை சொல்ல வேண்டாம். பெண்கள் உறவினர் குடும்ப விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

மீனம்:நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். வாகனப்பயணம் எளிதாக அமையும். பிள்ளைகள் அறிவாற்றல் செயல் திறனில் மேம்படுவர். நட்பு வட்டம் அதிகரிக்கும். விவகாரங்களில் சுமுக தீர்வு உருவாகும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வார். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியை தரும். பெண்கள் குடும்பநலனில் அக்கறைகொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

You must be logged in to post a comment Login