Astrology

மித்திரனின் வார­பலன் 17.06.2018 முதல் 23.06.2018 வரை

By  | 

மேஷம்:அளப்­ப­ரிய நற்­பலன் கிடைக்கும். மனதில் உத்­வே­கமும், செயல்­களில் வசீ­க­ரமும் ஏற்­படும். குடும்­பத்தில் சுப­நி­கழ்வு உண்­டாகும். பண­வ­ரவு சீராகும். பிள்­ளை­களின் தேவையை நிறை­வேற்­று­வீர்கள். எதி­ரிகள் மறை­மு­க­மாக கெடுதல் செய்வர். கவனம் தேவை. வியா­பா­ரத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்­ப­டுத்­து­வது நல்­லது. பணி­யா­ளர்கள் பணி இலக்கை பூர்த்தி செய்து சலுகை பெறுவர். பெண்கள் தெய்வ வழி­பாடு நடத்­துவர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

ரிஷபம்:புதிய முயற்­சியால் பணி சிறப்­பாக நிறை­வேறும். அறி­முகம் இல்­லா­த­வர்க்கு வாக­னத்தில் இடம் தர வேண்டாம். பிள்­ளைகள் உங்கள் சொல் கேட்டு செயல்­ப­டுவர். உடல் ஆரோக்­கியம் சீராக இருக்கும். வியா­பா­ரத்தில் இடை­யூ­று­களை தாம­த­மின்றி சரி­செய்ய வேண்டும். பணி­யா­ளர்கள் பணி­யி­டத்தின் சூழல் உணர்ந்து செயற்­ப­டவும். பெண்கள் பிற­ருக்­காக பணப்­பொ­றுப்பு ஏற்­கக்­கூ­டாது.
அதிர்ஷ்ட நாள்: புதன்

 மிதுனம்:நன்மை வந்து சேரும். மனதில் குழப்பம் ஏற்­பட வாய்ப்­புண்டு. நண்­பரின் ஆலோ­ச­னையால் உரிய வழி­காட்­டுதல் கிடைக்கும். பிள்­ளைகள் விரும்­பிய பொருள் வாங்கித் தரு­வீர்கள். உடல்­நலம் ஆரோக்­கியம் பெறும். வியா­பா­ரத்தில் ஆதாயம் சரா­சரி அளவில் இருக்கும். பணி­யா­ளர்கள் நிர்­வா­கத்தின் வழி­காட்­டு­தலை தவ­றாமல் பின்­பற்­றவும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்­கனம் பின்­பற்­றுவர்.
அதிர்ஷ்ட நாள்: சனி

கடகம்:எதிர்­கால தேவை­க­ளுக்­காக திட்­ட­மி­டு­வீர்கள். உடன்­பி­றந்­த­வர்­க­ளிடம் எதிர்­பார்த்த உதவி கிடைக்கும். தாய்­வழி உற­வினர் அன்பு பாராட்­டுவர். பிள்­ளைகள் படிப்பு, வேலை­வாய்ப்பில் மேம்­ப­டுவர். சுப நிகழ்­வு­களில் பங்­கேற்­பீர்கள். வியா­பா­ரத்தில் உற்­பத்தி விற்­பனை செழிக்கும். சேமிப்பு கூடும். பணி­யா­ளர்­க­ளுக்கு எதிர்­பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் நிம்­மதி நிறைந்த வாழ்வு பெறுவர்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

சிம்மம்:மனதில் உறு­தியும் உற்­சா­கமும் நிறைந்­தி­ருக்கும். பணியில் உரு­வான குறுக்­கீ­டுகள் வந்த சுவடு தெரி­யாமல் விலகும். பிள்­ளைகள் படிப்பு, செயல்­தி­றனில் மேம்­ப­டுவர். வியா­பா­ரத்தில் உற்­பத்தி, விற்­பனை அப­ரி­மி­த­மாக வளர்ச்சி பெறும். பணி­யா­ளர்­க­ளுக்கு விரும்­பிய சலுகை கிடைக்கும். பெண்கள் தாய்வீட்­டுக்கு இயன்ற அளவில் உத­வுவர்.
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு

கன்னி: எதிர்­பார்த்த சுப­செய்தி வந்து சேரும். பணி­களில் திறமை பளிச்­சிடும். உடன்­பி­றந்­தவர் உறு­து­ணை­யாக செயற்­ப­டுவர். விரும்­பி­ய­படி புதிய வாக­னத்தை வாங்­கு­வீர்கள். பிள்­ளை­களின் பிடி­வாத செயல்­களை சரி செய்­வீர்கள். கடன் தொந்­த­ரவு குறையும். வியா­பாரம் செழித்து லாப விகிதம் அதி­க­ரிக்கும். பணி­யா­ளர்கள் எளி­தாக பணி இலக்கை நிறை­வேற்­றுவர். பெண்கள் பணச்­செ­லவில் சிக்­கனம் பின்­பற்­றுவர்.
அதிர்ஷ்ட நாள்: வியாழன்

துலாம்: குடும்ப தேவை­க­ளுக்­காக கடன் பெறு­கின்ற சூழ்­நிலை மாறும். பேச்­சிலும் செய­லிலும் புத்­து­ணர்வு உண்­டாகும். பிள்­ளை­களின் நற்­செயல் பெற்­றோர்க்கு பெருமை சேர்க்கும். அள­வான உழைப்பு, சீரான ஓய்வு உடல்­ந­லத்தை பாது­காக்கும். வியா­பா­ரத்தில் வளர்ச்சி பெற அனு­கூல சூழ்­நிலை உரு­வாகும். பணி­யா­ளர்கள் சிறப்­பாக பணி­பு­ரிந்து நிர்­வா­கத்தின் நன்­ம­திப்பை பெறுவர். பெண்கள் வீட்டு உப­யோகப்பொருட்கள் வாங்­குவர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

விருச்­சிகம்: சூழ்­நிலை உணர்ந்து பிற­ரிடம் பேசு­வது நல்­லது. வெளியூர் பயணம் இனிய அனு­பவம் தரும். பிள்­ளைகள் உங்­களின் வழி­காட்­டு­தல்­படி நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் வளர்ச்­சியும் பண­வ­ரவும் கூடும். கடனில் ஒரு பகு­தியை செலுத்­து­வீர்கள். வியா­பா­ரத்தில் முன்­னே­று­வீர்கள். பணி­யா­ளர்­க­ளுக்கு எதிர்­பார்த்த சலுகை கிடைக்கும். பெண்­க­ளுக்கு தாய்­வீட்டு உதவி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நாள்: சனி

தனுசு: வாழ்­வியல் நடை­மு­றையில் நவீன மாற்றம் உண்­டாகும். அதிக பண­வ­ரவால் குடும்பத் தேவை பூர்த்­தி­யாகும். சிலர் வச­தி­யு­டைய வீட்­டுக்கு இடம் மாறுவர். பிள்­ளை­களின் செயல் சிறப்­பாக அமைந்­திட உத­வு­வீர்கள். உற­வி­னர்­களின் வரு­கையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். வியா­பார வளர்ச்­சியால் லாபம் அதி­க­ரிக்கும். பணி­யா­ளர்­க­ளுக்கு விண்­ணப்­பித்த கட­னு­தவி கிடைக்கும். பெண்கள் குடும்ப எதிர்­கால நலனில் கவனம் கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மகரம்: சூழ்­நிலை உணர்ந்து பேசு­வது நன்­மை­ய­ளிக்கும். குடும்­பத்­தி­னரின் தேவையை சிக்­கன செலவில் நிறை­வேற்­று­வீர்கள். பிள்­ளைகள் ஆன்­மி­கத்தில் சிறந்து விளங்­குவர். பணக்­கடன் ஓர­ளவு அடை­படும். வியா­பாரம் செழிக்க விடா­மு­யற்­சியும் உழைப்பும் தேவைப்­படும். பணி­யா­ளர்கள் பணி­யிட சூழல் உணர்ந்து செயற்­ப­டவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

கும்பம்:சமூக நிகழ்­வு­களை தெளிந்த மன­துடன் அணு­கு­வீர்கள். உங்கள் மீதான மற்­ற­வரின் பார்வை மதிப்பு மிகுந்­த­தாக இருக்கும். பிள்­ளை­களின் செயல்­களில் குள­று­படி ஏற்­ப­டலாம். பூர்வ சொத்தில் நம்­ப­க­மா­ன­வர்­களை பணி­ய­மர்த்­து­வது நல்­லது. நோய் தொந்­த­ரவு குறையும். எதிர்­பார்த்த சுப­செய்தி வந்து சேரும். வியா­பா­ரத்தில் நன்மை உண்டு. பணி­யா­ளர்கள் பாது­காப்பில் உரிய கவனம் செலுத்­தவும். பெண்கள் பிள்­ளை­களின் நலனில் அக்­கறை கொள்வர்.
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

மீனம்: அன்­றாட செயல்­களில் அக்­க­றை­யுடன் ஈடுபடுவீர்கள். பொது விடயங்களில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் அதிக தொழில்நுட்பம் அறிந்துகொள்வர். பெண்கள் கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.
அதிர்ஷ்ட நாள்: புதன்

 

 

 

You must be logged in to post a comment Login