Poetries

மித்திரன் கவிதைகள்

By  | 

 

புத்துயிரூட்டும் காலை

இரவியும் அகன்றான்
பகலியும் எழுந்தான்
இன்னிசைக்கும் புள்ளினங்கள்
இரை தேடி விரைந்தன
புல் நுனி கண்ட நுறைபனிகள்
குமிழ் உடைந்து கரைந்தன
மொட்டவிழ்க்கும் மலர் மீது
வண்டினங்கள் வட்டமிட்டு
யாழிசைத்தன
வகையராத எண்ணங்களோடு
நானும் விழி மறந்தேன் உற்சாகமாய்…

எப். நஸ்ரின் லத்தீப்,
நிகவெரடிய.

000

காத்திருப்பு

ஊமையானது உன்
வார்த்தை மட்டுமல்ல
என் உண்மையான அன்பும் தான்
உறுதுனையாக இருப்பாய்
என நினைத்தேன்,
கடைசியில் ஊனமாக்கி விட்டாய்
என் மனதை.
என் உடைந்த நெஞ்சுக்குள்
நீ புதைந்து கிடக்கிறாய்
விடை தெரியா வினாவாக!
விடுமுறைகள் கடந்தாலும்
விட்டுவிடும் மனம் என்னிடமில்லை
இருவரது இருதயத்துக்குள்
இரு பிரிகோடு
இடப்பட்டு விட்டதே…

றினாஸ்,
கிண்ணியா.

000

என் கனவில் எல்லை…

ஒவ்வொரு பொழுது
விடியும் வேளை – நான்
எத்தனையோ உயர்
பதவிகளில் பதவி
வகித்துக் கொண்டிருப்பேன்
எத்தனையோ அடியாட்கள் – என்
கட்டளைக்காக காத்திருப்பர்
சில வேளைகளில் கிரகம் விட்டு
கிரகம் மாறி வேற்று
கிரகங்களுக்கும் சென்றிருப்பேன்
ஒரே சொல்லில் என்னை
நிஜ உலகுக்கு கொண்டு வருவது
என் அன்பு அன்னையின்
காலை தேநீர்க்கான
அழைப்பு மட்டுமே…!

சீ. சங்கவி,
திருகோணமலை.

000

அன்றும் இன்றும்

அன்று – விண்மீன் இருந்தாலும்
முழு வானமும் உன்னைப் போல
அழகில்லை
நிலாமதி வந்து ஒளி கொடுத்தாலும்
உன்னைப்போல் பிரகாசம் இல்லை
முத்துமணி எவ்வளவு இருந்தாலும்
உன்னைப்போல் பெறுமதி இல்லை

இன்று – பட்டப்பகலில் சூரியன்
உச்சியில் இருந்தாலும்
உன்னைப்போல் வெப்பம் இல்லை
புயல் பலநாள் வீசினாலும்
உன்னைப்போல் பயங்கரம் இல்லை
மகா சமுத்திரம் கரைக்கு வந்து
என் உயிரை எடுத்து சென்றாலும்
உன்னைப் போல் என் ஆத்மாவை
தவிக்க செய்யாது!

ஜி. இசட். அம்ஜடீன்,
எலபடகம.

000

 

கண்ணீர்

அந்தப் புல்லாங்குழலின்
கண்கள்
இசைக்காக
கண்ணீர் விடுகின்றன
ஆனால் அவளோ
சீதனக் கொடுமையினால்
கழியும்
இளமையை
எண்ணி
கண்ணீர் விடுகிறாள்!

அலிறிஸாப்,
அக்குறணை.

000

நினைவில் நின்ற நினைவுகள்

மூடுபனி
தொட்டுவிட்ட
சிலிர்ப்பு

பூ பாளத்தில்
நனைந்த
பூஞ்சாரல்
நீராடிவிட்ட
புல்லரிப்பு

ஊமைக்குயில்
உச்சரித்த
கூ…கூ… நாதம்
கேட்டுவிட்ட
குறுகுறுப்பு

பனித்துளி
மாராப்பணிந்த
ரோஜா மொட்டு
பார்த்துவிட்ட
கிலுகிலுப்பு
இவையெல்லாம்
உனது
நினைவுகளில்
அன்பளிப்பு!

கல்லொளுவை பாரிஸ்,
மள்வானை.

000

முறைகேடு

வாழ்க்கை குடியில்
சந்தேக கற்கள்
கட்டப்படுகின்றன

புரிந்துணர்வற்ற பூச்சுக்கள்
சாயமற்று பூசப்படுகின்றன
பூச்சுக்கள் வெளிறி
கற்கள் வெளித்தெரிய
சரமாரியாக சரிகின்றன
சந்தேகம் எனும் கற்கள்
வாழ்க்கை எனும் குடி மீது

கூரைகளின் நிழலில்
கூடுகட்டி கூவ நினைத்த குயில்கள்
பாதியிலே வேறு வழியில்
பாதையமைத்துப் போவது
மனித சாதியிலே வந்து போகின்றது.

ஜெ. ஈழநிலவன்.

000

மனித வாழ்க்கை

மண்ணை நம்பி
வாழும் மானிட ஜென்மம் நாமே
பொன்னை தேடும்
கூட்டமும் நாமே
எம்மை தேடி வரும் புகழும் தாமே
அதைக்கொண்டு
தலைக்கணம் பிடித்து
அலையும் கூட்டமும் நாமே
விண்ணை எட்டும்
சாதனைகளும் நாமே
கடைசியில் மண்ணோடு
மறைந்து போகும்
மனித இனம் நாமே நண்பா

பலாங்கொட,
பெனாண்டோ.

000

உறவே உணக்காக

தொட்டு விட்ட என் தொடர்பு
தொடர்ந்து வரும் உன் பின்னே!
உனைப் பார்க்க உன் விழிகள்
பதிலளித்தனவோ!

கண்டதும் நீ சொன்ன வார்த்தை
கொள்ளை கொண்டது -என்
இதயம் உன் நினைவை

நாளாந்தம் நாளிகைகள்
நயமான பேச்சுக்கள்
ஆங்காங்கே சில வரிகள்
சிந்திக்க பல வழிகள்!

சேர்ந்த உன் வாழ்வு
சேர்ந்த என் உறவில் -இனி
சேராது உன் இதயம்
சேராயோ என் உறவில்!

காலத்தின் கோலங்கள்
கர்த்தரின் கையில்
பக்கத்தில் நீயிருந்தால்
சொர்க்கங்கள் தேவையில்லை!

உயிரிலும் மேலான -என்
உறவின் வருகைக்கு
ஆவலுடன் காத்திருப்பேன்
அன்பே உன் வருகைக்கு!

பி.வாசுகி,
தெஹிவளை.

000

விபரீதம்

நண்பனை அவன்
வீட்டிற்குத் தினம்
அழைத்துச் சென்றான்
சில நாட்களின் பின்
சகோதரிக்கு அவனை
கட்டாயத் திருமணம்
செய்து வைக்கவேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டது

நியாயவாதி,
மல்வானை.

000

தனிமை

உன் விழியிரண்டின் சங்கமத்தில்
பாய்ந்து வந்த பார்வைக் கனைகள்
இதயத்தைத் துளைத்து நின்ற அந்த நிமிடம்
பேச மொழியின்றி மௌனத்தில்
திளைத்த வேளை, அவனது கவனம் என் மீது
சிந்திய முதல் புன்னகை, தந்த புத்துணர்ச்சி
என்னை மெய் மறக்கச் செய்ததுவே! – என்
தனிமையைப் போக்க மீட்டிப் பார்க்கிறேன்
இதுவரை நடத்திய உன் திருவிளையாட்டை

ஜி.பி.நிலா ரம்ஸான்,
ஹோகந்தர.

000

ஏமாற்றம்

அன்பில் மிதக்கும் உணர்வுகளை
வாழ்க்கையில் தேடினேன்
ஆதியில் எனதான உன் அன்பு
கானலாகி கனவாகிப் போனது

என்னருகில் நெடுங் நீ
அன்று சொன்ன கதைகள்
எனது ஏழை உலகத்திற்கு
மாளிகை ஆனது

அந்த மாளிகை நொறுங்கிய நான்
அழ கண்ணீரையும் மிச்சப்படுத்தாமல்
நீ போய் விட்டாய்

நீ எப்போதும் எனதென்று
நிச்சயப்படுத்தி அன்புடன்
கூறிய வார்த்தைகள் என்
வாழ்வை தனியாக்கி கனவாகி போய்விட்டது.

ஜீ. இசட். அம்ஜடீன்,
எலபடகம.

000

உண்மையின் உறக்கம்

பாசம் என்பது வெறும் வேஷமாகிப் போனதால்
பண்பு என்பது பரிதவித்துப் போனது
அன்பு என்ற சொல்
அடமானமாகிப் போனதாலா்
காருணியம் காவு கொடுக்கப்படுகிறது
பொய்மை விழித்தெழுந்து
பேயாட்டம் போடுவதால்
உண்மை உறங்கிப் போனது.

எஸ்.பிரபா,
மட்டக்களப்பு.

You must be logged in to post a comment Login