Poetries

மித்திரன் கவிதைகள்!

By  | 

காதல் கணவனே!

எத்தனை ஜென்மத்து

பந்தமோ தெரியவில்லை…

உன்னை கண்ட அந்த நொடி

உன் மீது அளவிள்ளா அன்பு வந்தது.

நீ – என்னை நீங்கி

தொலைவில் இருந்தாலும்

உன் நினைவுகள்

என்னுள்ளே ஒட்டி கொண்டது…

உண்ணாமல்

உறங்காமல் என்னையே

மறந்த நாட்களும் உண்டு…

காலங்கள் பல என் – வாழ்வை

காயம் செய்தாலும்…

நீ – மருந்தாகி காயம் ஆற்றினாய்.

இருப்பினும் காலப்போக்கில்

ஆறாத மாறாத காயங்களை

நீயே தந்து மனதை வாட்டினாய்…

என் வாழ்க்கையையும்

என்னையும் முழுதாய் உன்னில்

ஒப்படைத்த பின் – உன்

அன்புக்காய

உன் அரவனைப்புக்காய்

உன் அக்கறைக்காய

உன் ஆசை வார்த்தைகளுக்காய்

மட்டுமே ஏங்கினேன்…

கால நேரம் மாறும்

என தெரிந்த எனக்கு

உன் மனமும் மாறும் என – உன்

செயல்களால் உணரவைத்தாய்…

ஆனாலும் என் தூய்மையான காதல்

உன்னை மாற்ற(மீண்டு)ம்

வந்தாய் எனக்காக…

என் காதல் கணவனே…

காலங்கள் பல கடந்துபோனாலும்

நீ எவ்வளவு காயங்களை

இடைவிடாமல் தந்தாலும்

என்றும் உன்னவளாய்…

உனக்கு மட்டும் உரியவளாய்…

உன்னொடு சாகும்வரை வாழவேண்டும்.

-த.திலிபா,
கொட்டகலை.

♥ ♥ ♥

என் தாரம் நீ!

தாரமாய் நீ கிடைத்தாய்

தங்கமென பாதுகாத்தேன்

தாயாய் உணவு புகட்டினாய்

தடைகள் தாண்டி வந்தாய்!

குழந்தையாய் தாலாட்டினாய்

குருவாய் போதித்தாய்

குற்றங்கள் மன்னித்தாய்

குலவிளக்காய் திகழ்ந்தாய்!

என் வாழ்வில் மகிழ்வு

நீயே காட்டினாய்

என் தோளில் பூங்கொடியானாய்

பொன்மகளாய் வாழ்வில் வந்தாய்!

வசந்தங்கள் காணச் செய்தாய்

வண்ணமாய் வாழ்வளித்தாய்

வானவில்லாய் வந்துதித்தாய்

வரமாய் நீ கிடைத்தாய்!

நல்ல மனைவி அமைவதே

வாழ்வில் வரமாகும்

நான் செய்த புண்ணியம்

என் வாழ்வில் தினமும் வசந்தமே!

-திருமதி. மியூரியல் ஜெயானந்தசாமி,
மட்டக்களப்பு.

♥ ♥ ♥

தாமரை நெஞ்சம்

தாமரை நெஞ்சம் – நித்தம்

உன்னை எண்ணி பூத்திருக்கும்

ஆதவன் உன் வரவையெண்ணி

வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது

கண்ணீருக்கு கவி சொன்ன

விழிகள் இன்று நீ ஏற்றிவைத்த

அன்பின் தீபத்தால் – சந்தோஷத்தின்

ஒளிகொண்டு பிரகாசித்திருக்கிறது

அன்பே உன் பாச நதியில்

காதலால் மலர்ந்திருக்கிறது

இவளின் காதல் நெஞ்சம்!

-எஸ். மஞ்சுளா,
கிரியெல்ல.

♥ ♥ ♥

என்னவளே…

உனக்காக பிறந்தவன்

நானே என அடிக்கடி

என்னிடம் சொன்னவளே

அதற்காகத்தானே

நானும் உனக்காகவே

காத்திருந்த என்னை

எதற்காகத்தானோ

மறந்து அடுத்தவனை

நீயும் மணந்தாயோ

என்னவளே!

-இளம்பிறை யோகன்,
புத்தளம்.

♥ ♥ ♥

இதயதேவதை

இதயத்தில் எங்கோ

வலிக்கிறது – தேடிப்

பார்த்தேன் என்

இதய தேவதை

இறங்கி எங்கோ

போய்க்கொண்டிருக்கிறாள்

அவள் திரும்பி

வருவதுக்கு அவளது

பாதச் சுவடுகளும்

இல்லையே கண்ணீரில்

கரைந்து

போய்க்கொண்டிருக்கிறதே!

-என்.பாரத்,
மானிப்பாய்.

♥ ♥ ♥

மலரின் மகிமை

மலரே உன்னை

மங்கைக்கு ஒப்பிடுகிறார்கள்

மங்கையரும் உன்னை

முடிதனில் சூடுகிறார்கள்

மரணித்தவர்களுக்கும்

உன்னை மாலையாய்

போடுகிறார்கள் – புனிதத்

தலங்களுக்கும் உன்னை

பூஜை செய்கிறார்கள்

மலரே உனக்கு இவ்வளவு

விதவிதமான கண்ணியம்

சில மணித்தியாலத்தில் – நீ

சிதைந்துவிடுகிறாய் என்பதினாலா!

-பாலமுனை வாஹீட்,
மல்வானை.

♥ ♥ ♥

நீ வராததால்….

அன்று மழைநீரில்

நனையாமல் என்னை

குடைதந்து தடுத்தாய்

இன்று கண்ணீரில்

நனைகின்றேனே

எப்படி தடுப்பாய்?

சுற்றி ஈரம் – என்

இதயத்தில் மட்டும்

வெப்பம் – எங்கும்

பசுமை என் இதயத்தில்

மட்டும் வெறுமை – நீ

வராததால்!

நீ வராததால் – என்

தோட்டத்து மலர்கள்கூட

மௌனம் அனுஷ்டிக்கின்றன

மழைத்துளிகள் அழுது

வடிக்கின்றன – என் மலர்த்

தோட்டத்தில் இரங்கல்

தீர்மானம் நிறைவேறுகிறது!

நான் உன்மீது கொண்ட

காதல் என் கண்களை,

காதுகளை, இதயத்தை

உறையவைத்து விட்டது!

-A. அமானுல்லாஹ்,
புத்தளம்.

♥ ♥ ♥

காந்தப் பார்வை

இரும்பைக் கவரும்

சக்தி காந்தத்திற்கு

இருப்பது தெரியும்..

இரும்பு மனதையும்

கவர்ந்துவிடும் உன்

காந்தப் பார்வையை

உன் விழியைப்

பார்த்தால் மாத்திரமே

புரியும்….

-என். கலைமதி,
பதுளை.

♥ ♥ ♥

விளக்கு

விளக்கு ஏற்றுவது

வீட்டிற்கு வெளிச்சம்

என்றால் – அதை

நீ ஏற்றுவது அந்த

விளக்கிற்கே வெளிச்சம்!

-க. அபிஷேக்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You must be logged in to post a comment Login