‘மொடல்’ அழகி கெளரவ கொலை பொலிஸில் சிக்கிய சகோதரன்

By  | 

பாகிஸ்தானில் குடும்ப கெளரவத்திற்காக ‘மொடல்’ அழகியை கொலை செய்த வழக்கில் அவரது உடன்பிறவா சகோதரனை பொலிஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல ‘மொடல்’ அழகி நயாப் நதீம், 29, லாகூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். துபாய் சென்று திரும்பிய நிலையில், கடந்த மாதம் வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையானது தெரியவந்துள்ளது. பொலிஸாரின் தீவிர விசாரணையில் மாடல் அழகி கொலையில் அவரது உடன்பிறவா சகோதரர் முகமது அஸ்லம் சிக்கினார். அவரை கைது செய்த பொலிஸார் கூறியதாவது:மொடல் அழகியான நயாப் நதீம், பல ஆண்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இது குடும்ப கெளரவத்தை கெடுப்பதாக நினைத்த முகமது அஸ்லம், அவரை கொன்றுள்ளார்.பாலியல் பலாத்கார கொலை என அனைவரும் கருத வேண்டும் என்பதற்காக, அவரை நிர்வாணமாக்கிவிட்டு தப்பியுள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment Login