Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

கணவன்: நெஞ்சு வலிக்குது டாக்டருக்கு போன் பண்றியா?
மனைவி: உங்க செல்போன் பாஸ்வேர்ட் சொல்லுங்க…
கணவன்: இப்ப பரவால்ல போன் பண்ணவேண்டாம்….

*****************************************************************

வாட்ஸ் அப் பாத்துட்டே எங்க ப்ளாட் தெரியாம …
கீழ் வீட்டுல போய் உக்காந்துட்டேன்……
அந்தம்மா சீரியல் பார்த்துட்டே டீ தந்துட்டு போவுது….

*****************************************************************

ஒரு மனுஷன் தனியா உட்கார்ந்து …
தன்னை தானே அடிச்சிக்கிறான்னா…
அங்க டெங்கு கொசு அதிகமா இருக்குன்னு அர்த்தம்…

*****************************************************************

கஷ்டபட்டு ஜன்னலோரத்துல சீட் பிடிச்சு…
ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு உட்காந்தா….
balance தரேன்னு சொல்லிட்டு போன…
கண்டக்டர நினைச்சு நினைச்சு தூக்கமே வரல…

*****************************************************************

மாசத்துக்கு ஒரு நாள்தான் சம்பளம் தாராங்க…
ஆனா வேலை மட்டும் தினமும் தாராங்க….

*****************************************************************

கண்ணா உனக்கு விளையாட தம்பி பாப்பா வேணுமா….
இல்ல தங்கச்சி பாப்பா வேணுமா…
எனக்காக நீங்க கஷ்டப்பட வேணாம் டாடி….
நான் எதிர் வீட்டு பாப்பா கூட விளையாடிக்கிறேன்.

*****************************************************************

முடி சின்னதா வெட்டி விடுங்க…
எவ்வளவு சின்னதா…
பொண்டாட்டி கைல புடிக்க முடியாத அளவுக்கு.

You must be logged in to post a comment Login