Jokes

வாங்க சிரிக்கலாம்…!

By  | 

செய் அல்லது செத்து மடி – நேதாஜி

படி அல்லது பண்ணி மேய் -என் பிதாஜி

*******************************************************************************

டேய் கண்ணா கடைக்குப் போய் நாலு நாட்டுக்கோழி முட்டை வாங்கிட்டு வாடா

சரிம்மா அந்த நாலு நாடும் எது எதுன்னு பேரை சொல்லுங்க

*******************************************************************************

மனைவி: என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள் கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?

கணவன்: நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கிற

*******************************************************************************

காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா

முறுக்கு தின்னும் போத நறுக் என்னு நாக்க கடிச்சுகிட்டா வருமே வலி அதுதான்

*******************************************************************************

ரொம்ப நாள் கழிச்சி உன் வீட்டுக்கு வந்திருக்கேன் வெறும் டீ மட்டும் தானா மச்சி

பின்ன என்ன செய்யனும்…..

கடிக்க ஏதாவது….

நாய் இருக்கு அவிழ்த்து விடவா?

*******************************************************************************

என் படம் பாதி நேரம் இருட்லையே ஓடுதுன்னு ரொம்ப கிண்டல் பண்ணீங்களே
இப்போ உங்க வாழ்க்கை முழுவதும் இருட்டுதான் நல்லா என்ஜாய் பண்ணுங்கோ

இயக்குனர்

*******************************************************************************

மனைவி: ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுது அவளுக்கு சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாது?

கணவன்: அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை காத்திருக்கட்டும் டீ

மனைவி: எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?

*******************************************************************************

அமெரிக்காவில் தூங்க முன்னாடி கணவன் மனைவிக்கு
gd nyt my love

இங்கிலாந்தில்
sleep well my love

நம் ஊர்ல
கேட் கதவு எல்லாம் சாத்தியாச்சா?

You must be logged in to post a comment Login