சினிமா

‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

By  | 

பீஸ்ட்’ படத்துக்கு பிறகு விஜய், தெலுங்கு பட இயக்குநர் வம்சி படிபல்லி இயக்கத்தில் தனது 66ஆவது படமான ‘வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிப்பு. தமன் இசை. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதை. தற்போது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இன்று (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (21) ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருப்பதாக அந்த போஸ்டர் காணப்படுகிறது. அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment Login