
வா… மனிதா!
பேரன்புகளும் பெரும் நேசங்களும் எப்போதும் பகிரப்படாமலேயே முடிந்து போகின்றன. எல்லையற்ற, சுயநலமற்ற நேசங்கள் எல்லாம் காலப்பெரு வெளிக்குள் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகி நிற்கின்றன.
எமக்கு நேசிப்பதும், அன்பு செலுத்துவதும் எவ்வாறு என்று தெரியாமலேயே ஒரு மாயைக்குள் வாழ்ந்து முடித்து சென்று சேர்கின்றோம்.
எங்கே ஒரே ஒரு முறை தனிமையில் நின்று எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆத்மார்த்தமாய் ஒரு ஜீவனை எம்மால் நேசிக்க முடியுமா என்பதை நினைத்து பாருங்கள்.
எவ்வளவு பெரிய மாயையில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம்….
பேரன்பு என்பது ஒருவரின் தீயசெயலை ஆதரிப்பது அல்ல. அவரிடம் தர்க்கம் புரிந்தாலும், கருத்து முரண்பாடு இருந்தாலும், மாறாக அவரிடம் எந்த குணம் இருந்தாலும், உள்ளதை உள்ளபடியே ஏற்று அவரை அவருக்காக நேசித்தாலே பேரன்பு. அது அனைவர் மீதும் உனக்கு தோன்ற தொடங்குமானால், நீ வாழ்வியலை உணர தொடங்கிவிட்டாய் மனிதா…!
வாழலாம் வா… பேரன்புகளோடும் பெரும் நேசத்தோடும்!
-ப்ரியா வெற்றிவேல்,
வெள்ளவத்தை.
You must be logged in to post a comment Login