General

வைரலாகும் விண்வெளியின் சூரியோதய புகைப்படங்கள்!

By  | 

சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர் பொப் பெஹன்கென் ,சூரியன் உதயமாகும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மே மாதம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் உதவியுடன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய முதல் வணிகரீதியான பால்கான் 9 ரொக்கெட் மூலம் விண்வெளி வீரர்களான பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் செய்தனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியே வந்து மற்ற விண்வெளி வீரர்களுடன், இருவரும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாதங்கள் ஆய்வு பணியை முடித்த விண்வெளி வீரர்கள் இருவரும் ஆக.,2ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.


இந்நிலையில் பூமிக்கு மேலே 400 கி.மீ தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட நான்கு புகைப்படங்களை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சூரிய உதயத்தின் முதல் தருணம் என விண்வெளி வீரர் பொப் பெஹன்கென் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். சிவப்பு நிற புள்ளியில் இருந்து சூரியன் மஞ்சளாக மேலெழும்பி வரும் ஆச்சர்யமான புகைப்படங்கள் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.
அட்லாண்டிக் கருத்துப்படி, சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமி வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும், விண்வெளி வீரர்கள் ஒரு சூரிய உதயத்தைக் காண்கிறார்கள். இதுபோன்று ஒரு நாளில் மொத்தம் 16 சூரிய உதயங்களை காண்கிறார்கள் என கூறப்பட்டுள்ளது. இரண்டு விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஜூலை மாத ஆரம்பத்தில், பெஹன்கென், விண்வெளியில் இருந்து ஊதா நிறத்தில் மின்னல் வெட்டும் வீடியோ காட்சியை பகிர்ந்திருந்தார்

You must be logged in to post a comment Login