Fashion

ஷூ லேஸ் காதணி

By  | 

லகப் பணக்காரர்கள் முதல் ஹொலிவுட் நட்சத்திரங்கள் வரை ஆயிரக்கணக்கான பிரபலங்களின் விருப்பமான ஃபெஷன் ப்ராண்ட்களில் ஒன்று ‘பாலென்சியாகா’.

நூறு வருடங்களுக்கு முன்பு ஸ்பெயினின் ராஜ குடும்பத்தினருக்கு ஆடை வடிவமைப்பு செய்துகொண்டிருந்த கிறிஸ்டோபல் பாலென்சியாகா என்ற ஃபெஷன் டிசைனரால் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் வந்தபோது அவரது கடை வலுக்கட்டாயமாக மூடப்பட்டதால் பாரிஸுக்கு இடம்பெயர்ந்தார். இப்போது பாரிஸில்தான் பாலென்சியாகாவின் தலைமையகம் இயங்கி வருகிறது.

விடயம் இதுவல்ல. அடிக்கடி வித்தியாசமாக, வேடிக்கையாக டிசைன் செய்து ட்ரெண்ட் அடிப்பது ‘பாலென்சியாகா’வின் வாடிக்கை. சில மாதங்களுக்கு முன் கிழிந்துபோன காலணியை விற்பனைக்கு கொண்டு வந்து வைரலானது. அந்த கிழிந்துபோன காலணியின் விலை கூட லட்சங்களில் ஆரம்பித்தது.

சமீபத்தில் புதுவகையான குப்பை அள்ளும் பையை அறிமுகப்படுத்தியது. இப்போது லேட்டஸ்ட்டாக ஷூ லேஸ் வடிவில் ஒரு காதணியை சந்தையில் இறக்கியிருக்கிறது. இதன் விலை 261 டொலர்.

You must be logged in to post a comment Login