
Health
ஹேர் கண்டிஷனர்
முடியின் இயற்கையான கருமை குறையும்போது முடியின் மேல்தோல் மெலிதாகும். இதனால் முடி சொரசொரப்பாக மாறி உடைய நேரிடும். முடியை மென்மையாக்க சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஈரப்பதம் உள்ள ஷெம்புக்களை பயன்படுத்துங்கள். இதனால் முடி மென்மையாகும்.
ஷெம்பு பயன்படுத்தும்போது உச்சந்தலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சூரியனின் கடுமையான தாக்குதல், நரை மற்றும் இதர மாசுக்களால் பாதிக்கப்படுவது உச்சந்தலை தான்.
மென்மையான கண்டிஷனர் பயன்படுத்துங்கள். டிரையர் பயன்படுத்தும்போது அதிகமான வெப்ப நிலையில் பயன்படுத்த வேண்டாம்.
தலையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக உள்ளது. வேப்பிலையை ஹேர்பேக்காக நாம் தலைமுடியில் அப்ளை செய்யும் பட்சத்தில் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு என அனைத்தையும் நீக்கி தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும். வேப்பிலைகளை கொதிக்கும் நீரில் போட்டு அது ஆறியதும், அதனை கொண்டு தலைமுடியை அலசவும். இதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பு சக்தி கூந்தலில் உள்ள பேன்கள், பொடுகு, உச்சந்தலை காய்ந்து போதல், முடியுதிர்தல் மற்றும் வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சினைகளை குணமாக்கும். அது உங்களது கூந்தலை மென்மையாக்கி பளபளப்பாக்கும்.
வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷெம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை போன்றது.
You must be logged in to post a comment Login