பொது

ஹோட்டலும் ஹொஸ்பிடலும்

By  | 

“என்னப்பா உணவு இவ்ளோ மோசமா இருக்கு, இதை சாப்பிட்டா மருத்துவமனைக்குதான் போகணும் போல இருக்கு” என்று வாடிக்கையாளர் கோபப்பட, “கவலைப்படாதீங்க… அதுக்குத்தான் பக்கத்திலேயே ஹொஸ்பிடலும் கட்டி வச்சிருக்கோம்” என்று ஹோட்டல் சர்வர் சொல்வது ஜோக்காக இருக்கலாம். ஆனால், இரண்டும் அப்படித்தான் ஆரம்பித்தன.

‘ஹொஸ்பெஸ்’ என்ற இத்தாலிய பதத்திலிருந்துதான் ‘ஹொஸ்பிடல்’ வந்தது. அதற்கு அம்மொழியில் ‘விருந்தினர்’ என்று பொருள். நீண்ட தூரம் நடந்து செல்லும் பயணிகள் சற்று ஓய்வெடுக்க கூடாரம் அமைக்கப்பட்டது. வந்து தங்குபவருக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

நாளடைவில் நோயாளிகளுடன் தங்க பிற பயணிகள் விரும்பவில்லை. அவர்களுக்காக பக்கத்திலேயே வேறொரு கூடாரம் அமைக்கப்பட்டது. நோயாளிப் பயணிகள் முதல் கூடாரத்தில், மற்ற பயணிகள் இரண்டாவது கூடாரத்தில். அதாவது ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே ஹொஸ்பிடல்!

நல்ல ஐடியா இல்ல!

You must be logged in to post a comment Login