General

20 விருதுகள் அள்ளிய குறும்படம்

By  | 

கூத்துப் பட்டறையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஷீலா ராஜ்குமார். சின்ன சின்ன குறும்படங்களில் நடித்து வந்த அவர் டூ லெட் படத்தின் மூலம் சினிமா நடிகை ஆனார். பல விருதுகளை பெற்ற அந்த படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு மனுஷங்கடா, அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். மீண்டும் திரௌபதி படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அவர் மாயத்திரை படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்த படப்பிடிப்பும் இல்லை. சினிமா அடுத்து என்ன ஆகும் என்றும் உறுதியாக தெரியவில்லை. இந்த நிலையில் ஷீலா மீண்டும் குறும்படத்திற்கு திரும்பி உள்ளார். அவர் நடித்த “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற குறும்படம் பரவலான பாராட்டை பெற்று வருகிறது
படத்தின் இயக்குனர் து.ப.சரவணன் படம் பற்றி கூறியதாவது:
நான் திரையுலகில் 8 ஆண்டுகளாக இருக்கிறேன். பாலாஜி இயக்கிய குள்ளநரிக்கூட்டம், கணேஷ் விநாயக் இயக்கிய தகராறு, வீரசிவாஜி மற்றும் நிசப்தம் போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். பிறகு சினிமா கனவோடு இருந்த நான், என்னை நிரூபிக்க முதலில் குறும்படம் ஒன்றை எடுப்பது என்று முடிவு செய்து, இதற்கான கதையை தயார் செய்தேன். அப்போது உருவானதுதான் இந்த குறும்படத்தின் கதை. இப்படத்திற்கு இதுவரை 20 விருதுகள் கிடைத்துள்ளன. என்றார்.

You must be logged in to post a comment Login