Articles

2021இல் 15 கோடி மக்களை வாட்டப்போகிறது கடும் வறுமை!

By  | 

– எச்சரிக்கிறது உலக வங்கி

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2021ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் இருக்க வாய்ப்புள்ளது என்றும் மூலதனம், உழைப்பு, திறன்களை பின்பற்றுவதன் மூலம் உலக நாடுகள் கொரோனாவுக்குப் பிந்தைய “வேறுபட்ட பொருளாதாரத்துக்கு” தயாராக வேண்டும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது,

வணிகங்கள் மற்றும் பிற துறைகளில் புதுமையை புகுத்த ஆலோசிக்கவேண்டும். கொரோனா தொற்றுநோய் இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடியில் இருந்து 15 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளும். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 150 மில்லியனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொருளாதார சுருக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து இது மாறுபடும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2021ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் இருக்க வாய்ப்புள்ளது.

இது 2017ஆம் ஆண்டில் 9.2 சதவீத வீதத்துக்கு பின்னடைவை குறிக்கும். தொற்றுநோய் உலகெங்கும் குறையவில்லை என்றால், 2020ஆம் ஆண்டில் வறுமை விகிதம் 7.9 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று மற்றும் உலகளாவிய மந்தநிலை உலக மக்கள் தொகையில் 1.4 சதவீதத்துக்கும் அதிகமானோர் தீவிர வறுமையில் விழக்கூடும்.

வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் வறுமைக் குறைப்புக்கான இந்த கடுமையான பின்னடைவை மாற்றியமைக்க, நாடுகள் கொரோனாவுக்குப் பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்துக்குத் தயாராகவேண்டும்.

மூலதனம், தொழிலாளர், திறன்கள் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளில் அனுமதிப்பதன் மூலம், இது சாத்தியப்படும். புதிதாக தோன்றும் ஏழைகள் ஏற்கனவே அதிக வறுமை விகிதங்களை கொண்ட நாடுகளில் இருப்பார்கள்.

பல நடுத்தர வருமான நாடுகளில் கணிசமான மக்கள் தீவிர வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள்.

மொத்தத்தில் 82 சதவீதம் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இந்த நிலை இருக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது. கொரோனா தொற்றுநோயானது காலநிலை மாற்றங்களின் அழுத்தங்களுடன் ஒன்றிணையும். மேலும் இது 2030ஆம் ஆண்டளவில் வறுமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இலக்கை விரைவான, குறிப்பிடத்தக்க மற்றும் கணிசமான கொள்கை நடவடிக்கை இல்லாமல் அடையமுடியாது என்று உலக வங்கி கூறியது.

2030ஆம் ஆண்டளவில் உலக வறுமை விகிதம் 7 சதவிகிதமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

You must be logged in to post a comment Login