Q&A

Cook with அதிதி!

By  | 

இப்போது பொலிவூட்டில்தான் ஃபுல் பாய்ச்சல் அடிக்கிறார் அதிதி ராவ் ஹைதரி. ‘காற்று வெளியிடை’ ஹீரோயின்.  நெட்ஃபிளிக்ஸின் ‘த கேர்ள் ஆன்தட்ரெயின்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ‘அஜீப் டாஸ்டான்ஸி’லும் பிச்சு உதறியிருக்கிறார். கோலிவூட்டிலும் பிருந்தா மாஸ்டரின் ‘ஹே சினாமிகா’, சர்வானந்துடன் ‘மகா சமுத்திரம்’ என லிஸ்ட் நீட்டுகிறார்.

எப்படி போச்சு, லொக்டவுன்?

ரொம்பவே யூஸ்ஃபுல்லா! உபயோகமான விஷயங்கள் நிறைய பண்ணினேன். வீட்ல இருக்கிற பழைய பர்னிச்சர்களை தேடிப்பிடிச்சு, கலர்கலரா பெயிண்ட் பண்ணினேன். இப்ப எல்லாமே செம ஃப்ரெஷ் லுக்ல அசத்துது. ஃபிட்னஸ்ல எப்படி கவனம் செலுத்துறேனோ அப்படி சாப்பாட்டிலும் ப்ரியம் காட்டுறேன். யெஸ். I am a real foodie. சாப்பிடுறதுல மட்டுமில்ல, சமைக்கறதுலேயும் கெட்டிக்காரி. ஹைதராபாத் பிரியாணி பிரமாதமா சமைப்பேன். கீமா, கிச்சடியிலும் எக்ஸ்பர்ட்.

அப்புறம், போன லொக்டவுன்ல புதுசா ஒரு மேக்கிங்கும் கத்துக்கிட்டேன். பீட்சா பண்ண தெரிஞ்சுக்கிட்டேன்!

உங்களோட சின்ன வயசில இருந்து இப்ப வரை நீங்க விரும்பினதுல நடக்காம இருக்கறது எது?

பாலே டான்ஸ். ரொம்ப வருஷமா அதை கத்துக்கணும்னு நினைக்கறேன். அதுக்கான சூழல் அமையல. சீக்கிரமே நடக்கும்னு நினைக்கறேன்.

ஒருநாள் காலைல நீங்க பெட்ல இருந்து எழும்போது, ஆணாக இருந்தா நீங்க செய்யக்கூடிய விஷயம் என்ன?

நல்ல கற்பனை! ஆணா இருந்தா பெண்கள் அத்தனை பேரையுமே என் குடும்பத்துல உள்ள பெண்கள் மாதிரி ட்ரீட் பண்ணுவேன். அத்தனை பேரையும் அன்பும் அக்கறையுமா… மதிப்பும் மரியாதையுமா பாத்துப்பேன்.

செம கிளாமராவும் கலக்கறீங்க..?

கிளாமரஸ் ஆக்ட்டிங் கெட்ட விஷயமில்லையே! Its lovely thing.  நான் ஆக்ட்டிங் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவ இல்ல. கடவுள் அருளால் நல்ல ரோல்கள் கிடைக்குது. போலிவூட்ல இருந்து கொலிவூட் வரை எல்லா இண்டஸ்ட்ரியிலும் நல்ல நல்ல ஸ்கிரிப்ட் அமையுது. சஞ்சய்லீலா பன்சாலி, மணிரத்னம் சார் மாதிரி பெரிய இயக்குநர்கள், டெக்னீஸியன்கள் படங்கள் எனக்கு கிடைக்கறதை அதிர்ஷ்டமா நினைக்கறேன்.

கடினமா உழைப்பது மட்டும்தான் எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம். கேரக்டரா அழகா அதை செதுக்கி கொண்டு வர்றது இயக்குநர்கள்தான்.

லவ் ப்ரபோசல்ஸ் வந்திருக்கா?

ம்ம்ம்… ரசிகர்கள் நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஒரு சமயம் துருக்கி போயிருந்தேன். அங்க ஒரு ரசிகர், ‘நீங்க எங்க இருந்து வந்திருக்கீங்க’னு சீரியஸாகக் கேட்டார். ‘ஐயெம் கம்மிங் ஃப்ரம் இந்தியா’னு பதில் சொன்னேன்.

உடனே அவர் சிரிச்சார். ‘எதுக்காக சிரிச்சீங்க’னு கேட்டதும் அவர், ‘நீங்க சொர்க்கத்துல இருந்து வர்றீங்கன்னு நினைச்சேன்’னார்! இப்படி ஜொள்ஸ் டயலாக்ஸும் கேட்டிருக்கேன்.

யாருக்கும் தெரியாம ஒரு விஷயம் பண்ணணும்னா, எதைப் பண்ண விரும்புவீங்க?

அப்படி எதையும் பண்ண விரும்ப மாட்டேன். ஆனா, அப்படி பண்ணும்போது கெமரா இருக்கறதையும் விரும்ப மாட்டேன்! எப்பூடி!

உங்களுக்கு ட்ராவல் பிடிக்குமாமே?

ஆமா. என்னோட ஃபேவரிட் இடம் லண்டன். அங்கே உள்ள ஒவ்வொரு தெருவும், ஏரியாவுமே எனக்கு அத்துப்படி. எங்க ஷாப்பிங் பண்ணினா எது வாங்கலாம்னு தெரியும். அந்தளவுக்கு லண்டனை தெரிஞ்சு வச்சிருக்கேன்.

ஆக்சுவலா, எங்க ட்ராவல்னாலும் மூணு நாளோ அல்லது மூணு வாரமோ… என்னோட லக்கேஜ்ஜை ரொம்ப சிம்பிளாதான் பேக் பண்ணுவேன். ரெண்டு செகண்ட்ல எடுத்துட்டு போற மாதிரி எப்பவும் ரெடியா வச்சிருப்பேன். ஸோ, எப்ப ஷூட்ல பிரேக் கிடைச்சாலும் பெட்டியைத் தூக்கிட்டு கிளம்பிடுவேன்!

எப்போதும் கூடவே எடுத்துச் செல்லும் 5 பொருட்கள் என்னென்ன?

வெரி சாரி. நான் ஒரு பெண். ஸோ, நான் ஐநூறு பொருட்கள்னாலும் எடுத்துட்டு போவேன். அதெல்லாம் சொல்ல முடியாது!

 

You must be logged in to post a comment Login