General

QUIZ

By  | 

குயிஸ் (QUIZ) என்ற ஆங்கிலச் சொல்லை புதிர் என்று தமிழில் அர்த்தப்படுத்துகிறோம். இந்த குயிஸ் என்ற ஆங்கிலச் சொல் எப்படி வந்தது என்பதே ஒரு புதிர்தான்.

1780இல் இங்கிலாந்திலுள்ள டப்ளின் நகரிலுள்ள ஒரு தியேட்டர் நிர்வாகி, ‘ஒரே நாளில் ஒரு புதிய ஆங்கிலச் சொல்லைக் கண்டுபிடித்து பேசும் மொழியில் புகுத்திவிடுவேன்’ என்று சொல்லி பத்து லட்சம் பவுண்ட் பந்தயம் கட்டினார். அதெல்லாம் நடக்காத காரியம் என்று எல்லோரும் எள்ளி நகையாடினர்.

அந்த நபர், வேலை இல்லாமல் சுற்றித் திரியும் பலருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து QUIZ என்ற எழுத்துக்களை டப்ளின் நகரத்தின் எல்லா சுவர்களிலும் கிறுக்கச் சொன்னார். 100க்கும் மேற்பட்டவர்கள் இரவோடு இரவாக QUIZ என்று எங்கும் எழுதிவிட்டார்கள். மறுநாள் காலையில் டப்ளின் மக்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் QUIZ என்ற சொல்லைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஒருவருக்கொருவர் QUIZ என்றால் என்ன என்று விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். யாருக்கும் அதன் பொருள் தெரியவில்லை.

ஆங்கிலத்தில் ஒரே இரவில் உருவாகி, மறுநாள் காலையில் நகர் முழுவதும் பரவி பிரபலம் ஆகிவிட்டது, QUIZ. இந்தச் சொல்லுக்கு ‘ஒன்றுமே இல்லை’ என்று பொருள் கொண்டனர். ‘பொருள் இல்லாத சொல்’ ஞரணை என்று சொல்லி வந்தனர். பிற்காலத்தில் இது, புதிர் போட்டு பதிலை அறிந்து அறிவை வளர்த்துக் கொள்ளும் வார்த்தையாகிவிட்டது.

You must be logged in to post a comment Login