Fashion

Specs style for Women

By  | 

* முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியை அணிவதை தவிருங்கள்.

* விலை குறைந்த பிரேம்கள் மூக்கில் அழுத்தமாக பதிந்து கருப்பு அடையாளத்தை ஏற்படுத்தும். ஆதலால் அழுத்தம் கொடுக்காத ‘வெயிட்லெஸ்’ பிரேம்களை பயன்படுத்துங்கள்.

* ‘பெதர்டச்’ கண்ணாடிகளையும் தேர்வு செய்யலாம். அவை கீழே விழுந்தாலும் சட்டென்று உடையாது என்பதால் தயக்கமின்றி அணியலாம்.

* தினமும் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியை கழற்றிவிட்டு விளக்கெண்ணெய்யை விரல்களில் எடுத்து கண் புருவம், மூக்கு பகுதியில் தேய்த்து விடுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருப்பு அடையாளங்கள் தோன்றாது.

* நாட்டியமாடும் பெண்களுக்கு கண்ணாடி அசெளரியத்தை ஏற்படுத்தும். நாட்டியத்திற்கு கண்கள் முக்கியம். விழி அசைவு, பாவனைகள் இவைகளை கண்ணாடி வழியாக காண்பிக்க முடியாது. ‘காண்டாக்ட் லென்ஸ்’ அணிந்து நிலைமையை சமாளிக்கலாம்.

* கண்ணாடி அணியும் பெண்களுக்கென்று பிரத்யேக மேக் அப் உள்ளது. புருவங்களுக்கு சற்று அழுத்தமான ‘ஷேடு’ கொடுத்து இமைகளுக்கு ‘மஸ்காரா’ போட்டு கண்களுக்கு அழுத்தமான ‘ஐலைன்’ கொடுத்து ‘ஐ ஷேட்’டை சற்று மென்மையான கலரில் கொடுத்தால் போதும். கண்ணாடி அணிந்திருந்தாலும் அதன் வழியே கண்கள் அழகாக தெரியும். கண்ணாடியை மெல்லியதாக அணிந்தால் பார்க்க அழகாகவும் இருக்கும். இந்த மேக்கப்பை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

* கண்ணாடி அணியும் பெண்களின் முகம் வசீகரமாக தெரிவதற்கு, முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம். இதுதான் மிகவும் முக்கியம். வட்ட வடிவமான முகம் கொண்டவர்கள் வட்டமான கண்ணாடி அணியக்கூடாது.

* கண்ணாடி அணிந்தாக வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் முகத்தை எப்படி வசீகரமாக வைத்துக்கொள்வது என்று பாருங்கள். கண் இமைகள் அடர்த்தியாக இருந்தால் கண்கள், கண்ணாடியை தாண்டியும் அழகாக தெரியும்.

* விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கண்ணாடி போன்ற தொல்லையான விஷயம் எதுவுமில்லை. இருந்தாலும் அதையும் தாண்டி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அழகாக தோற்றமளிக்க விரும்புபவர்கள் கண்ணாடியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் முன்பு கூடுமானவரை கண்ணாடி அணிவதை தவிர்க்கிறார்கள். அதனால் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

You must be logged in to post a comment Login